சக்தி ஆலை குழு பாலியல் வல்லுறவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சக்தி ஆலை குழு பாலியல் வல்லுறவு (Shakti Mills gang rape) என்றும் அழைக்கப்படும் 2013 மும்பை கும்பல் பாலியல் வல்லுறவு வழக்கு , [1] [2] மும்பையில் ஆங்கில மொழி இதழில் பணியாற்றிய 22 வயது புகைப்பட பத்திரிகையாளர் ஒருவர் ஐந்து பேர் உள்ளிட்ட குழுவினால் பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட சம்பவத்தை குறிப்பதாகும். அதில் ஒருவர் சிறுவர் ஆவார். இந்த சம்பவம் 22 ஆகஸ்ட் 2013 அன்று, தெற்கு மும்பையில் மகாலட்சுமிக்கு அருகிலுள்ள ஆள் நடமாட்டம் இல்லாத சக்தி ஆலை வளாகத்திற்கு ஒரு ஆண் பத்திரிகையாளருடன் பணி நிமித்தமாக சென்றபோது இந்த சம்பவம் நடந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட சக ஊழியரை அரைக் கச்சத்தால் கட்டி, பாலியல் வல்லுறவு செய்துள்ளார். பாலியல் வன்கொடுமையின் போது குற்றம்சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரின் புகைப்படங்களை எடுத்து, பாலியல் வல்லுறவினை தெரிவித்தால் சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டினார். பின்னர், பதினெட்டு வயது தகவல் தொடர்பு ஊழியர் ஒருவரும் 31 ஜூலை 2013 அன்று ஆலை வளாகத்திற்குள் குழு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக தெரிவித்தார். [3]

20 மார்ச் 2014 அன்று, மும்பை குற்றவியல் நீதிமன்றம் இரண்டு வழக்குகளிலும் 13 நபர்களில் ஐந்து நபர்களையும் குற்றவாளிகளாக அறிவித்தது. 4 ஏப்ரல் 2014 அன்று, புகைப்பட பத்திரிகையாளர் குழு பாலியல் வல்லுறவு வழக்கில் மூன்று குற்றவாளிகளுக்கு மீண்டும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற இரண்டு குற்றவாளிகளில், ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.மற்றவர்கள் அந்த வழக்கில் குற்றம் ஒப்பியவராக மாறினர். இரு வழக்குகளில் உள்ள இரண்டு சிறார்களை, சிறார் நீதி வாரியம் தனித்தனியாக விசாரித்தது. அவர்கள் 15 ஜூலை 2015 அன்று குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, நாசிக் சீர்திருத்த பள்ளியில் மூன்று ஆண்டுகள் (காவலில் உள்ள நேரம் உட்பட) சிறையில் அடைக்கப்பட்டனர், இது இந்திய சட்டத்தின் கீழ் சிறார் குற்றவாளிக்கு கிடைக்கும் அதிகபட்ச தண்டனை ஆகும்.

சம்பவம்[தொகு]

மும்பையில் பணிபுரியும் 22 வயது புகைப்பட பத்திரிகையாளர் சக்தி ஆலை வளாகத்தில் ஐந்து நபர்களால் குழு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார், அங்கு அவர் 22 ஆகஸ்ட் 2013 அன்று ஒரு ஆண் சக ஊழியருடன் பணி நிமித்தமாக சென்றார். பாதிக்கப்பட்ட இருவர் காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலங்களின்படி, புகைப்பட பத்திரிகையாளர் மற்றும் அவரது சக ஊழியர் மாலை 5:00 மணியளவில் ஆள் நடமாட்டம் இல்லாத சக்தி ஆலை வளாகத்தின் சில புகைப்படங்களை எடுக்கும் பணியில் தங்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறினர். ஐந்து ஆண்கள் அந்தப் பெண்ணுடன் வந்த ஆண் ஊழியரை அரைக் கச்சத்தால் கட்டிப்போட்டு, அந்தப் பெண்னை குழுவாக பாலியல் வல்லுறவு செய்தனர். பாலியல் வல்லுறவு செய்தவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றம் நடந்த இடத்தை சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்தினர், மேலும் அலைபேசியில் அவளது இரண்டு புகைப்படங்களை எடுத்து, தாக்குதல் குறித்து தகவல் தெரிவித்தால் அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என்று மிரட்டினர். [4]

அந்தப் பெண் தாக்குதலுக்குப் பிறகு, அவளை அவளுடைய சக ஊழியர் வைத்திருந்த இடத்திற்கு அழைத்து வந்தனர்.குற்றவாளிகள் வெளியேறியபோது, அவள் ஐந்து பேரால் ஆறு முறை பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாகவும், மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும் அவள் தன் நண்பருக்குத் தெரிவித்தாள். [5] மகாலட்சுமி நிலையத்தினை அடைந்ததும், அவளுடைய சக ஊழியர் தங்கள் உரிமையாளரைத் தொடர்புகொண்டு அவரை வரச் சொன்னார்கள். அவர்கள் பெத்தர் சாலையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவமனைக்கு வாடகை வாகனத்தில் சென்றனர். ஆகஸ்ட் 26, [6] அன்று காவல் துறையினரிடம் ஒப்புதல் அளித்தார் . மருத்துவமனையில் இருந்து ஆகஸ்ட் 27 இரவு விடுவிக்கப்பட்டார். [4]

சான்றுகள்[தொகு]

  1. Rebecca Samervel (2014-04-04). "Mumbai Shakti Mills rape cases: Death penalty for 3 repeat offenders". The Times of India. TNN. http://timesofindia.indiatimes.com/city/mumbai/Mumbai-Shakti-Mills-rape-cases-Death-penalty-for-3-repeat-offenders/articleshow/33238680.cms. பார்த்த நாள்: 2014-04-08. 
  2. Sukanya Shantha (2014-04-08). "Mumbai Shakti Mills gangrape: All three convicts sentenced to death for repeat offence". The Indian Express. http://indianexpress.com/article/india/india-others/mumbai-shakti-mills-gangrape-all-three-convicts-sentenced-to-death-for-repeat-offence/. பார்த்த நாள்: 2014-04-08. 
  3. V Narayan (4 September 2013). "Call centre staffer too was raped inside Shakti Mills - Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/mumbai/Call-centre-staffer-too-was-raped-inside-Shakti-Mills/articleshow/22273944.cms. பார்த்த நாள்: 10 May 2017. 
  4. 4.0 4.1 "Mumbai gang-rape: photographer has left hospital, accused taken to Shakti Mills". NDTV. 2013-08-28. பார்க்கப்பட்ட நாள் 2014-07-11."Mumbai gang-rape: photographer has left hospital, accused taken to Shakti Mills". NDTV. 28 August 2013. Retrieved 11 July 2014.
  5. Nikhil Dixit (2013-08-28). "Mumbai gang-rape: Bulky man began beating me, reveals male colleague of photojournalist". Dnaindia.com. பார்க்கப்பட்ட நாள் 2014-07-11.
  6. "Mumbai gang-rape: Full text of the victim's statement to the police". Dnaindia.com. 2013-08-26. பார்க்கப்பட்ட நாள் 2014-07-11.