சக்காக்னைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Zaccagnaite
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுformula Zn4Al2CO3(OH)12·3H2O
இனங்காணல்
நிறம்வெண்மை

சக்காக்னைட்டு (Zaccagnaite) என்பது Zn4Al2CO3(OH)12·3H2O என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இத்தாலி நாட்டின் ஆல்ப்சு மலைப் பகுதியில் கராரா பளிங்கு கற்களில் உள்ள குழிவுகளில் கால்சைட்டுடன் சேர்ந்து வெண்மையான அறுகோண படிகங்களாகத் தோன்றுகிறது. அலுமினியம் நிறைந்த சூழலில் இசுபேலரைட்டின் நீர் வெப்ப மாற்றத்தால் சக்காக்னைட்டு உருவானதாகக் கருதப்படுகிறது. இத்தாலிய கனிம சேகரிப்பாளரான தொமினிகோ சக்கக்னா (1851-1940) நினைவாக கனிமத்திற்கு சக்காக்னைட்டு எனப் பெயரிடப்பட்டது. வெண்மை நிறம் முதல் வெளிர் மஞ்சள் நிறம் வரையிலான நிறத்தில் இது காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Zaccagnaite Mineral Data", www.webmineral.com, பார்க்கப்பட்ட நாள் 2024-01-07
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்காக்னைட்டு&oldid=3863376" இலிருந்து மீள்விக்கப்பட்டது