உள்ளடக்கத்துக்குச் செல்

சக்கர வியூகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சக்கர வியூகம் அல்லது பத்ம வியூகத்தை காட்டும் ஒரு வரைபடம்
சக்கர வியூகத்தில் நூழையும் அபிமன்யுவை சித்தரிக்கும் ஒரு பாறைச் சிற்பம்.

சக்கர வியூகம் அல்லது பத்ம வியூகம் என்பது பழங்கால இந்து சமய போர்முறைகளில் பயன்படுத்தப்பட்ட ஒரு போர் வியூகமாகும். இது ஒரு சுழலும் மனித மரண இயந்திரமாக கருதப்படுகிறது.[1] வெவ்வேறு அளவுகளினால் ஆன ஏழு வட்ட சக்கரங்களால் சக்கர வியூகம் அமைக்கப்படுகிறது. இந்து சமய இதிகாசமான மகாபாரதத்தில் இந்த சக்கர வியூகத்தில் சிக்கி அர்ஜூனனின் மகன் அபிமன்யு உயிரிழந்தார்.

மகாபாரதத்தில் இந்த சக்கர வியூகம் மூன்று முறை அமைக்கப்பட்டதாகவும், இரு முறை அர்ஜூனன் இதை உடைத்து வெற்றிபெற்றதாகவும், ஒரு முறை இந்த சக்கர வியூகத்தினை அபிமன்யூ உடைத்து சென்று, பின்பு வெளியேற தெரியாமல் மாண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரங்கள்

[தொகு]
  1. கதையில் கலந்த கணிதம்: சக்கர வியூகமும் 1/7 பின்னமும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்கர_வியூகம்&oldid=2228937" இலிருந்து மீள்விக்கப்பட்டது