சக்கரவர்த்தி சோமசன்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சக்ரவர்த்தி சோமசன்மா (பிறப்பு: ஏப்ரல் 28, 1936), சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர். இந்தியா, தமிழ்நாடு தஞ்சாவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் டி.இ.எல்.சி, ஆரம்பப் பாடசாலை, ஈ.வெ.ரா, வாசுகி, இராமகிருட்ணா தொடக்கப் பள்ளி, மங்ஸ்கில் நீல்ட்டன் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் கல்வி கற்றுள்ளார். தமிழ், ஆங்கிலம், மலாய் போன்ற மொழிகளை நன்கறிந்த இவர், சொந்த தொழில் ஈடுபட்டு வருகிறார்.

ஊடகத்துறை[தொகு]

சிங்கப்பூரில் இவர் ஒரு ஊடகவியலாளராக அறியப்பட்டுள்ளார். திரையொளி, அறிவுச் சுடர் இதழ்களின் துணையாசிரிராகவும், சூரியன், வீடியோ மூவி நியூஸ் ஆகியவற்றின் நிருபராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் வீடியோ மூவி நியுசின் விற்பனை அதிகாரியாகவும் இருந்துள்ளார்.

பதவிகள்[தொகு]

ம.செ.க. உறுப்பினராகவும், ஏ.யு.பி. செயற்குழு உறுப்பினராகவும், சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் ஆயுள் உறுப்பினராகவும், போதைப்பொருள் தடுப்புச் சங்கத்தின் தொண்டூழிய அதிகாரியாகவும், அண்ணா நாடக மன்றத்தின் ஆலோசகராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

இலக்கியப் பணி[தொகு]

1954ம் ஆண்டில் எழுதத் தொடங்கிய இவர் சிறுகதை, மரபுக் கவிதை, புதுக்கவிதை, கட்டுரை முதலிய துறைகளில் ஆர்வம் காட்டி வந்தார். இவரின் கன்னிக் கவிதை ‘பிரிந்து நான் இருந்திடேன்' எனும் தலைப்பில் தமிழ் முரசில் பிரசுரமானது. வான்முகில், இயற்கைதாசன், சமூகன், சோமா போன்ற புனைப்பெயர்களில் சுமார் 50க்கும் அதிகமான சிறுகதைகளையும், 60 கவிதைகளையும், 10 கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய படைப்புகள் தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்து வெளிவரும் சிற்றிதழ்களிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.

எழுதியுள்ள நூல்[தொகு]

  • செண்பக மலர்கள்

உசாத்துணை[தொகு]

  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு