சகாப் சிங் சவுகான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாகப் சிங் சவுகான்
Sahab Singh Chauhan
பி-4/81 பூ தேவி நிவாசு, யமுனா விகார், தில்லி-110053
பதவியில்
2008- முதல்
தொகுதி கோண்டா சட்டமன்றத் தொகுதி
தில்லி சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2003-2015
தனிநபர் தகவல்
பிறப்பு 10 சனவரி 1950 (1950-01-10) (அகவை 70)
உத்திரப் பிரதேசம், பதார்கா கிராமம் ,புலந்தர் மாவட்டம் , இந்தியா.
இறப்பு 16 - 08 - 2018
தில்லி, யமுனா விகார்
அரசியல் கட்சி பாரதிய சனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) இந்திராவதி சிங்
இருப்பிடம் தில்லி
சமயம் இந்து
As of 1 April, 2010
Source: [1]

சாகப் சிங் சவுகான் (Sahab Singh Chauhan) கோண்டா சட்டமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு தில்லியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார். தில்லி சட்டமன்றத் தொகுதியில் ஐந்து முறை தொடர்ச்சியாகச் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு [1].

யமுனா விகார் சட்டமன்றத் தொகுதியில் இரண்டு முறையும், கோண்டா சட்டமன்ற தொகுதியில் மூன்று முறையும் போட்டியிட்டு இவர் தில்லி சட்டமன்றத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015 தேர்தலில் சுமார் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி கட்சியின் சிறீ தத் சர்மா என்பவரிடம் தோல்வியுற்றார் [2].

தில்லியின் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது சட்ட மன்றங்களின் உறுப்பினராக தொடர்ந்து ஐந்து முறை சாகப் சிங் பணியாற்றியுள்ளார். செயல்திறனுள்ள அரசியல்வாதியாக 1980 ஆம் ஆண்டு முதல் இவர் இயங்கி வருகிறார். 1981 முதல் 1987 வரை கோண்டா மண்டலத்தின் கட்சித் தலைவராகவும், 1988 முதல் 1991 வரை சாதரா மாவட்ட செயலாளராகவும், 1991 முதல் 1993 வரை வடகிழக்கு தில்லி மாவட்ட பொதுச் செயலாளராகவும், இதே மாவட்டத்தின் துணைத்தலைவராகவும் பல்வேறு கட்சிப் பொறுப்புகளில் இவர் இருந்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சகாப்_சிங்_சவுகான்&oldid=2776687" இருந்து மீள்விக்கப்பட்டது