உள்ளடக்கத்துக்குச் செல்

க. வெ. நரசிம்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

க. வெ. நரசிம்மன் (C.V. Narasimhan) (பிறப்பு 1925) என்னும் கஞ்சீவரம் வெங்கடேசன் சாஸ்திரி நரசிம்மன் இந்திய காவற்துறை அதிகாரியாகப் பணியைத் துவக்கி, சிபிஐ இயக்குனரானவர்.[1]

வாழ்வும் கல்வியும்[தொகு]

இவர் சங்ககிரியில் பிறந்தவர். பெற்றோர் வெங்கடேசன், ஜெகதீம்பாள். லயோலாவில் கல்லூரிப்படிப்பு கணிதத்தில் தங்கப்பதக்கம். பெங்களூர் புனித வளனார் கல்லூரியில் சிறிது காலம் பேராசிரியர் பணி. காவல் துறையின் பயிற்சியின்போது அனைத்து பிரிவுகளிலும் சிறந்த அதிகாரியாகத் தேர்வுப் பெற்று இந்திய அரசின் கைத்துப்பாக்கியைப் பரிசாக பெற்றார்.

பணிகள்[தொகு]

சிபிஐ விசாரனை முறைகளில் மிகச்சிறப்பாக வடிவமைத்தவர். ஸ்வீடனில் நடைபெற்ற 'இண்டர்போல்' மாநாட்டின் தலைவராக இருந்து சர்வதேசப் பொருளாதாரக் குற்றங்களைப் புலனாய்வுசெய்யும் உத்திகளை வகுத்து அளித்தவர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் வேண்டுகோள்படி 'சட்டக் கையேட்டை' உருவாக்கினார். பல்வேறு நடவடிக்கைகளின்போது காவல் துறையினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டியாக அனைத்து மாநில காவல் துறையிறரும் இப்புத்தகத்தை பயன்படுத்துகின்றனர்.கடத்தல் பேர்வழிகளைக் கட்டுப்படுத்தும் 'காபிபோசா' சட்டத்தை உருவாக்கியவர். 1974ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர்வண்டி வேலை நிறுத்தத்தை ஓரிரு நாளில் முடிவுக்குக் கொண்டுவந்ததில் பெரும்பங்கு வகித்தவர். தமிழகக் காவல்துறை டி.ஜ.பி. அந்தஸ்தில் இலஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராகப்(1980-1983) பணியாற்றி ஓய்வு பெற்றார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.cvnarasimhan.org/
  2. தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்91
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._வெ._நரசிம்மன்&oldid=2326885" இலிருந்து மீள்விக்கப்பட்டது