க. பாலேந்திரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

க. பாலேந்திரா இலங்கையில் மேடை நாடக துறையின் வளர்ச்சியில் முக்கிய கலைஞர், நாடக இயக்குநர், தமிழ் அவைக்காற்று கழகத்தின் நிறுவகர்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாக கொண்டவர்.அங்கு வருடா வருடம் நிகழ்ந்து வரும் சுதேசிய விழா நாடகங்கள் ஆரம்ப அனுபவங்கள். 1972 இல் கட்டுப்பெத்தை பல்கலைக்கழகத்தில் பயின்றபோது பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடான நுட்பம் சஞ்சிகையின் ஆசிரியராகவும் சங்கத்தலைவராகவும் இருந்தபோது கலைஞர்கள், அறிஞர்களுடன் ஏற்பட்ட தொடர்புகள் அவரது சீரிய நாடக பயணத்திற்கு அடிகோலின. கல்வி சார்ந்து பொறியியல் துறையில் முழுநேரத் தொழில் செய்து கொண்டு நாடகமே முழுமூச்சாக இயங்கிய அவர் நாடகத்துறை சார்ந்த ஆனந்தராணி இராஜரட்ணம் அவர்களை மணம்புரிந்து நாடகப் பயணத்தைத் தொடர்ந்தார்.

கலைப் பயணம்[தொகு]

சுகைர் ஹமீட் அவர்களின் ஏணிப்படிகள் என்ற குறியீட்டு நாடகத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்த‍தன் மூலம் இலங்கை நாடக ஆர்வலருக்குத் தெரியவந்த அவர் தாசீசியஸ் அவர்களின் நெறியாள்கையில் பிச்சை வேண்டாம், கந்தன் கருணை போன்ற நாடகங்களில் பங்குகொண்டார். இவர்களுக்கு வேடிக்கை, கிரகங்கள் மாறுகின்றன, தூரத்து இடிமுழக்கம் ஆகிய நாடக‍ங்களை எழுதி நெறியாள்கை செய்தார். 1976இல் கொழும்பு லயன்வென்ற் அரங்கில் மேடையேறிய இந்திரா பார்த்தசாரதியின் 'மழை' நாடகமே இவர் முதன்முதல் தயாரித்து நெறியாள்கை செய்த நாடகம். இதில் இவரும் ஆனந்தராணியும் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். இலங்கையின் எல்லாபகுதிகளிலும் ஈழத்தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் மேடையேறியதோடு சென்னையிலும் 2010இல் மேடையேறியது குறிப்பிடத்தக்கது.மழை, அரையும் குறையும், கண்ணாடி வார்ப்புகள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியதுடன் கண்ணாடி வார்ப்புகள் ரூபவாகினியிலும் ஒளிபரப்பாகியது. தமிழ் அவைக்காற்றுகைக் கழகத்தை உருவாக்கி இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் 62க்கு மேற்பட்ட நாடகங்களை நெறிப்படுத்தி மேடையேற்றிய இவர் எந்த கொள்கை கோட்பாடுகளுக்கும் ஆட்பட்டுவிடாமல் நாடகமே மூச்சாக கொண்டு நாடகத்தின் வளர்ச்சியில் தனது காத்திரமான விசாலமான பங்களிப்பை செலுத்தியிருக்கின்றார்.

நெறிப்படுத்திய நாடகங்கள்[தொகு]

முதல் 23 நாடகங்கள் இலங்கையிலும் 23-62 வரையிலாட நாடங்கள் புலத்திலும் நெறியாள்கை செய்தார்.

  1. இவர்களுக்கு வேடிக்கை -1974
  2. கிரகங்கள் மாறுகின்றன -1974
  3. தூரத்து இடி முழக்கம் - 1976
  4. மழை - 1976
  5. பலி -1978
  6. நட்சத்திரவாசி -1978
  7. ஒரு யுகத்தின் விம்மல் - 1978
  8. கண்ணாடி வார்ப்புகள் - 1978
  9. பசி - 1978
  10. புதிய உலகம் பழைய இருவர் -1978
  11. ஒரு பாலை வீடு- 1979
  12. இடைவெளி -1979
  13. யுகதர்ம‍ம் - 1979
  14. நாற்காலிக்கார‍ர் -1979
  15. முகமில்லாத மனிதர்கள் -1980
  16. திக்கு தெரியாத காட்டில் - 1980
  17. இயக்க விதி -3 -1980
  18. சுவரொட்டிகள் -1980
  19. சம்பந்தம் - 1980
  20. அரையும் குறையும் -1981
  21. மூன்று பண்டிதர்களும் காலம் சென்ற ஒரு சிங்கமும் -1981
  22. துக்ளக் -1982
  23. மரபு -1982
  24. வார்த்தையில்லா நாடகம் 1983
  25. பார்வையாளர்கள் 1985
  26. எரிகின்ற எங்கள் தேசம் 1985
  27. வேடரை உச்சிய வெள்ளைப் புறாக்கள் -1991
  28. பாரத தர்ம‍ம் -1991
  29. பிரத்தியேக‍க்காட்சி -1991
  30. தரிசனம் -1991
  31. தப்பி வந்த தாடி ஆடு -1992
  32. துன்பக் கேணியிலே -1992
  33. நம்மைப் பிடித்த பிசாசுகள் -1993
  34. இரு துயரங்கள் -1993
  35. ஐயா இலெக்சன் கேட்கிறார் -1994
  36. போகிற வழிக்கு ஒன்று -1994
  37. மலைகளை அகற்றிய மூடக்கிழவன் -1996
  38. ஆற்றைக் கடத்தல் -1996
  39. எப்போ வருவாரோ -1997
  40. அயலார் தீர்ப்பு - 1997
  41. அவசரக்கார‍ர்கள் -1997
  42. மெய்ச்சுடரே - 1997
  43. பெயர்வு - 1998
  44. ஒரு பயணத்தின் கதை -1998
  45. பரமார்த்த குருவும் சீடர்களும் - 1999
  46. பார்வைக் கோளாறு - 2000
  47. காத்திருப்பு -2001
  48. வேருக்குள் பெய்யும் மழை -2002
  49. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - 2003
  50. அவன் அவள் - 2003
  51. திக்கற்ற ஓலம் - 2003
  52. பெருங்கதையாடல் -2004
  53. அரசனின் புத்தாடை -2004
  54. சர்ச்சை - 2006
  55. மலைகள் வழிமறித்தால் - 2006
  56. பாவி? - 2007
  57. எல்லாம் தெரிந்தவர்கள் - 2008
  58. மரணத்துள் வாழ்வு - 2009
  59. படிக்க ஒரு பாடம் - 2009
  60. ஒற்றுமை -2010
  61. இது ஒரு நாடகம் -2010
  62. தர்ம‍ம் -2010

நூல்கள்[தொகு]

  • யுக தர்மம் - நாடகமும் பதிவுகளும் 2017
  • கண்ணாடி வார்ப்புகள் -நிர்மலா நித்தியானந்தன், மல்லிகா இராஜரண்டம் ஆகியோருடன் இணைந்து 2013
  • பாலேந்திராவின் அரங்கக் கட்டுரைகள் 2021
  • பாலேந்திராவின் நேர்காணல்கள் 2023

வெளி இணைப்புகள்[தொகு]

க. பாலேந்திரா - ஒரு நாடக இயக்கம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._பாலேந்திரா&oldid=3738448" இலிருந்து மீள்விக்கப்பட்டது