க. இராமச்சந்திரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

க. இராமச்சந்திரா (இறப்பு: ஏப்ரல் 26, 1976) ஈழத்துத் தமிழறிஞர். தமிழிலும், ஆங்கிலத்திலும் ஏராளமான கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியவர். தமிழில் செய்யுள்கள் பலவற்றை இயற்றியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இராமச்சந்திரா யாழ்ப்பாணம், நயினாதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கதிரேசுவின் புதல்வர். பிற்காலத்தில் கொழும்பில் வாழ்ந்தார். இலங்கை அரசாங்கத் தொடருந்து சேவைப் பகுதியில் உயரதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

பத்திரிகாசிரியர்[தொகு]

Religious Digest என்ற ஆங்கில சமய இதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆத்மஜோதி ஆன்மிக இதழின் கௌரவ ஆசிரியராகவும் இவர் சேவையாற்றினார்.

சமூகப் பணி[தொகு]

கொழும்பில் அரசப் பணியாளர்களிடையே சமய நிகழ்ச்சிகளை நடத்தினார். இரமண மகரிசியைத் தமது குருவாகக் கொண்டார். "ரமணசரணானந்தன்" என்று அழைக்கப்பட்டார். உலக சைவ மாநாடுகள் பலவற்றில் கலந்து கொண்டார்.

எழுதிய நூல்கள்[தொகு]

 • பகவான் சிறீ இரமண மகரிஷிகளின் அவதார மகிமையும், சன்னிதானப் பெருமையும் (1942)
 • ரமணத்தியானம்
 • ரமண ஸ்தோத்திர மஞ்சரி
 • ஆதி சங்கரரின் அவதார மகிமையும், அவர் காட்டிய அருள் நெறியும்
 • அன்னை கிருஷ்ணாபாய்
 • பெரியார் தோத்திர மஞ்சரி (1948)
 • பெரியார் அர்ச்சனமாலை
 • சமரச ஞானக்கோவை
 • உதிர்ந்த மலர்கள்
 • முருகன் புகழ்மாலை
 • கதிர்காமப் பதிகம் (1961)
 • செல்வச் சந்நிதிப் பதிகம்
 • Hinduism in a Nutshell
 • In the Company of Saints
 • Religions of the Tamils - Past and Present
 • The message of Saint Thayumanavar
 • Astrology as a Science - A Challenge to Church and Scientists

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._இராமச்சந்திரா&oldid=1301149" இருந்து மீள்விக்கப்பட்டது