கோவில்பத்து எனையாளும் கண்ணபெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோவில்பத்து எனையாளும் கண்ணபெருமாள் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அமைந்துள்ள வைணவக்கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் நாகப்பட்டினம்-வேதாரண்யம் சாலையில திருத்துறைப்பூண்டிக்குத் தெற்கே 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. [1]

இறைவன், இறைவி[தொகு]

திரௌபதி, என்னையாளும் கண்ணா என்று போற்றிய கோயில். கமலவல்லித்தாயார் தனி சன்னதியில் உள்ளார். ஆஞ்சநேயர் தெற்கு நோக்கியவண்ணம் உள்ளார்.[1]

சிறப்பு[தொகு]

துர்வாசர் தன்னுடைய சீடர்களுடன் பாண்டவர்களின் இருப்பிடத்திற்கு வந்தபோது காலம்கடந்துவிட்ட நிலையில் அட்சய பாத்திரம் பயனற்றுப்போனது. முனிவரின் கோபத்திலிருந்து தப்பிக்க திரௌபதி கண்ணனை வேண்ட, அவளுக்கு கண்ணன் அருள் தந்த கோயிலாகும். திரௌபதிக்கு அருள் செய்வதற்காக கண்ணன் அமர்ந்து வந்த கருடனுமாக இரட்டைக் கருடனைக் கொண்ட கோயில். கண்ணன் அட்சயப் பாத்திரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு பருக்கையை உண்டு உலக உயிர்களைக் காத்ததாகவும், துர்வாசரும் பசி நீங்கிய நிலையில் பாண்டவர்களுக்கு ஆசீர்வாதம் தந்துவிட்டுப் புறப்பட்டதாகவும் கூறுவர். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014