கோவிலூர் செல்வராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோவிலூர் செல்வராஜன் (Koviloor Selvarajan) ஒரு ஈழத்து பாடகர், நடிகர், கவிஞர் மற்றும் பத்திரிகை ஆசிரியர். இவரது இயற்பெயர் செல்வராஜன் ராசையா. இவரது முதலாவது சிறுகதை விடியாத இரவுகள்

இவர் பற்றி[தொகு]

இவர் இலங்கை வானொலியில் பல நாடகங்களில் பங்கேற்று நடித்துள்ளார். வானொலிப் பாடகராக இருந்ததோடு, இசையமைப்பாளராகவும் திகழ்ந்தார். இலங்கை வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் விளங்கினார். தினகரன் பத்திரிகையில் இவரது படகுத்துறை – 1975, லாவண்யா ஒரு முற்றுப்புள்ளி – 1978, இளமைக் கோவில் ஒன்று – 1977 ஆகிய நாடகங்களை எழுதினார். சிந்தாமணி, வீரகேசரி, லண்டன் - மேகம், நோர்வே – பறை, பாரிஸ் - ஈழநாடு, ஈழமுரசு ஆகிய பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன.

விருதுகள்[தொகு]

  • புலம்பெயர்ந்தோருக்கான தந்தை செல்வா விருது
  • மெல்லிசைக் கவிஞன் என்னும் பட்டம் - ஜேர்மனி தமிழ் மன்றம் - 1999
  • விடியாத இரவுகள் - லில்லி தேவசிகாமணி இலக்கியப் பரிசு, பணமுடிப்பும் - 1999

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவிலூர்_செல்வராஜன்&oldid=3208302" இலிருந்து மீள்விக்கப்பட்டது