கோவிலூர் ஆதீனம்
Appearance
கோவிலூர் ஆதீனம் அல்லது கோவிலூர் மடம் காரைக்குடி அருகில் கோவிலூரில் உள்ள ஓரு வேதாந்த மடம். இந்த மடமே பல்வேறு வேதாந்த நூல்களைத் தமிழில் முதன் முதலில் மொழி பெயர்த்ததாக அறியப்படுகிறது.
வரலாறு
[தொகு]இந்த மடம் முதன் முதலில் கோவிலூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் முத்துராமலிங்க ஞானதேசிகர் மூலம் தொடங்கப்பட்டது. இந்த மடம் கொற்றவாளீஸ்வரர் கோவில் அருகில் இவரால் அமைக்கப்பட்டது. இவர் இந்தக் கோவிலின் சில திருப்பணிகளை மேற்கொண்டார். இத்திருப்பணி வீரப்ப ஞானதேசிகரால் முடிக்கப்பட்டது. இந்த மடத்தின் அதிபதிகள் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தைச் சேர்நவர்கள். [1]
செயல்பாடுகள்
[தொகு]- வேத பாடசாலை
- திருமுறைக் கல்லூரி
- சிற்பக் கல்லூரி
- இசைக் கல்லூரி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும்