கோவிந்தகர் அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1870 ஆம் ஆண்டில் கோவிந்தகர் கோட்டை

கோவிந்தகர் அரண்மனை (Govindgarh Palace) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் கோவிந்தகரில் அமைந்துள்ள ஓர் அரண்மனையாகும். இதை கோவிந்தகர் கோட்டை என்றும் அழைக்கிறார்கள். ரேவாவின் ஆட்சியாளரால் 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோட்டை கோவிந்தகர் ஏரியின் கரையில் ஓர் அரச இல்லமாக செயல்பட்டது.

வரலாறு[தொகு]

2018 ஆம் ஆண்டில் கோட்டையின் உள்பகுதி

கோவிந்தகர் கோட்டை 1853 ஆம் ஆண்டில் ரேவா மற்றும் கோவிந்தகரின் ஆட்சியாளரான ராசா ரகுராச் சிங் என்பவரால் கட்டப்பட்டது. கோட்டை போன்ற கட்டமைப்பை இவர் அரண்மனையாகப் பயன்படுத்தினார். [1] அரண்மனை வளாகத்தில் ஏராளமான கட்டிடங்கள் மற்றும் கோயில்கள் இருந்தன, ஒரு கட்டத்தில் இந்தியாவில் காணப்பட்ட முதல் வெள்ளை புலியான மோகன் இங்கு வளர்க்கப்பட்டது. [2] அரண்மனை கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக பயன்பாட்டில் இருந்தது, ஆனால் இந்திய சுதந்திரமும், அதன்பின்னர் ரேவா இளவரசரின் வீழ்ச்சியும் கோட்டை வெறுமையாக விடப்பட்டது. பின்னர் கட்டிடத்தில் ஓர் அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. [3]

2018 ஆம் ஆண்டில் கோட்டை புதுப்பிக்கப்பட்டு ஓர் ஆடம்பர விடுதியாக மாற்றப்படப்போவதாக அறிவிக்கப்பட்டது. [1][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "ATA - Projects Details". www.aishwaryatipnisarchitects.com. பார்க்கப்பட்ட நாள் 2020-06-19.
  2. Chowdhary, Charu (2018-12-20). "Latest travel Articles & blogs". India News, Breaking News, Entertainment News | India.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-19.
  3. 3.0 3.1 "Govindgarh Fort, Rewa". www.nativeplanet.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவிந்தகர்_அரண்மனை&oldid=3046600" இலிருந்து மீள்விக்கப்பட்டது