கோழிப்பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோழிப்பபாம்பு, பறவைநாகம், குக்குடசா்ப்பம் ( kukkuta sarpa) என்பது பழங்கால நுால்களில் கூறப்படும் ஒரு பாம்பு ஆகும். இதுகுறித்து சீவக சிந்தாமணி, மேருமந்தர புராணம் முதலிய நுால்களில் கூறப்பட்டுள்ளது.

சீவகன் பல்லவ நாட்டிற்குச் சென்றிருந்தபோது, அந்நாட்டரசன் மகள் பதுமையைக் கோழிப்பாம்பு தீண்ட, அதன் நஞ்சினைச் சீவகன் தீர்த்து அவளை மணம் செய்து கொண்டான் என்று சீவகசிந்தாமணி கூறுகிறது.

மேருமந்திர புராணம் என்னும் நுாலில் சத்திய கோஷன் என்னும் சிறப்புப் பெயரை உடைய அமைச்சன், பொருட்செல்வத்தில் பேராசையுடையவனாய் அதனோடு செற்றமும் பகையும் கொண்டிருந்தபடியினால், சமரீ என்னும் விலங்காகவும் பின்னர்க் கோழிப்பாம்பாகவும் பிறந்தான் என்று கூறகிறது.

பாகுபலி என்றும் புஜபலி என்றும் பெயருள்ள முனிவருடைய உருவச்சிலையை 525வில் உயரமுடையதாகப் பொன்னால் செய்து பரதநச் சக்கரவத்தி பெளதனபுரத்தில் அமைத்தாா் என்றும் அவ்வுருவச்சிலையைச் சூழ்ந்து கோழிப்பாம்புகள் வசித்து வந்தபடியினாலே மனிதர் யாரும் அதன் அருகில் செல்ல முடியாமலிருந்தது என்றும் கன்னட நுால்கள் கூறப்படுகிறது.

குக்குடசர்ப்பம் என்னும் கோழிப்பாம்பின் உருவ அமைப்பு குறித்து சீவக சிந்தாமணி, பதுமையாா் இலம்பகத்தில், "நங்கைதன் முகத்தை நோக்கி" என்னும் செய்யுள் உரையில், உரையாசிரியா் நச்சினார்க்கினியர், கோழிப்பாம்பைப் பற்றிய செய்தியைக் கீழ்கண்வாறு கூறுகிறாா்.[1]

கொங்கலா் கோதை நங்கை யடிகளோ வென்று கொம்போ்
செங்கயற் கண்ணி தோழி திருமகட் சென்று சோ்ந்தாள்

மேற்கோள்கள்[தொகு]

  1. மயிலை சீனி. வேங்கடசாமி தமிழுக்கு வழங்கிய கொடை இரண்டாம் தொகுப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோழிப்பாம்பு&oldid=3313604" இருந்து மீள்விக்கப்பட்டது