கோரா (புதினம்)
நூலாசிரியர் | இரவீந்திரநாத் தாகூர் |
---|---|
உண்மையான தலைப்பு | গোরা (வெள்ளை) |
நாடு | பிரித்தானிய இந்தியா |
மொழி | வங்காளம் |
வகை | புதினம் |
வெளியிடப்பட்ட நாள் | 1910 |
பக்கங்கள் | 624 |
கோரா (Gora) (வங்காளம்: গোরা) பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது, இரவீந்திரநாத் தாகூர் இப்புதினத்தை தனது தாய்மொழியான வங்காள மொழியில் 1910-ஆம் ஆண்டில் எழுதி கொல்கத்தாவில் வெளியிட்டார். 624 பக்கங்கள் கொண்ட இப்புதினம் அரசியல் மற்றும் சமயம் பற்றிய தத்துவ விவாதங்கள் நிறைந்துள்ளது. [1]இப்புதினத்தில் இந்திய விடுதலை, உலகளாவியம், சகோதரத்துவம், பாலின சமத்துவம், பெண்ணியம், சாதி, வர்க்கம், பாரம்பரியம் மற்றும் நவீனத்துவம், நகர்ப்புற உயரடுக்கு மற்றும் கிராமப்புற விவசாயிகள், காலனி ஆட்சி, தேசியம் மற்றும் பிரம்ம சமாஜம் போன்ற பிற கருப்பொருள்கள் கொண்டுள்ளது.
புதினத்தின் மையக் கருத்து
[தொகு]"கோரா" இரண்டு ஜோடி காதலர்களின் இரண்டு இணையான காதல் கதைகளைக் கொண்டுள்ளது: கோரா மற்றும் சுசரிதா, பினாய் மற்றும் லொலிடா. அவர்களின் உணர்ச்சிகள் மற்றும் வளர்ச்சிகளை 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவில் நிலவிய சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகளின் பின்னணியில் காட்டப்படுகிறது. [2]
தமிழ் மொழிபெயர்ப்ப்பு
[தொகு]இரவீந்திரநாத் தாகூரின் கோரா புதினத்தை தமிழ் மொழியில் மொழிபெயர்த்த கே. செல்லப்பனுக்கு 18 செப்டம்பர் 2021 அன்று சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.[3][4]
மேலும் படிக்க
[தொகு]- Bhattacharya, Nandini (2015). Rabindranath Tagore Gora: A Critical Companion. Primus Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-84082-42-0.
- Hogan, Patrick Colm; Pandit, Lalita (2003). Rabindranath Tagore: Universality and Tradition. Fairleigh Dickinson University Press. pp. 141–212. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8386-3980-1.
- Singh, Kh. Kunjo (2002). Humanism and Nationalism in Tagore's Novels. Atlantic Publishers & Dist. pp. 99–112. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-269-0184-5.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Indian Ruminations (5 January 2012). Tagore’s Idea of Nation and Nationalism in Gora – Nakul Kundra, Amritsar
- ↑ George, K. M., ed. (1993). Modern Indian Literature: an Anthology: Fiction. Vol. Vol. 2. New Delhi: Sahitya Akademi. p. 89–90. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7201-506-2.
{{cite book}}
:|volume=
has extra text (help) - ↑ Sahitya Akademi Prize for Translation for 2020
- ↑ Tamil writers get Sahitya Akademi prize for translation
வெளி இணைப்புகள்
[தொகு]- கோரா (புதினம்) கூகுள் புத்தகங்களில் (Bengali)
- கோரா (புதினம்) கூகுள் புத்தகங்களில் (English translation)
- கோரா (புதினம்) கூகுள் புத்தகங்களில் (English translation with notes)
- গোরা সমগ্ৰহ[தொடர்பிழந்த இணைப்பு]