கோரலின்மை வெகுமதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோரலின்மை வெகுமதி (no-claim bonus) என்பது காப்பீட்டு நிறுவனங்களால் ஈட்டுறுதியாளர்களுக்கு (காப்பீட்டு ஆவணங்களின் உரிமையாளர்களுக்கு) குறிப்பிட்ட காப்பீட்டுக் கால அளவுக்குள் காப்புறுதி உரிமைகோரல் ஏதும் இல்லாத பட்சத்தில் ஊக்குவிப்பு வெகுமதியாக வழங்கப்படும் ஒரு தொகையாகும். பொதுவாக இத்தொகை காப்பீட்டு ஆவணத்தின் புதுப்பிப்பின் போது காப்பீட்டு தவணைத் தொகையிலிருந்து கழிவாக வழங்கப்படுகின்றது[1].

முந்தைய காப்பீட்டு ஆவணக் காலத்தில் காப்புறுதி உரிமைகோரல் ஏதும் செய்யாத காப்பீடு ஆவணதாரர்களுக்கு காப்பீட்டாளர்கலால் வழங்கப்படும் ஒரு வெகுமதியாகும் இது. நடைமுறையில் உள்ள தற்போதைய விதிமுறைகளின்படி, இது உரிமையாளரின் வாகனத்துக்கு சேதம் உள்ளிட்ட ஆபத்துகளுக்கான காப்பீட்டுத் தவணைத் தொகையில் 20% முதல் 50% வரை படிப்படியாக அதிகரிக்கிறது. இந்த அதிகரிப்பு தொடர்ச்சியான காப்புறுதி உரிமைகோரல் இல்லாத ஆண்டுகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றது. கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் கோரலின்மை வெகுமதியானது கணக்கிடப்படுவதற்கான காப்பீட்டு தவணைத் தொகை என்பது உரிமையாளரின் வாகனத்துக்கு சேதம் உள்ளிட்ட ஆபத்துகளுக்கானதேயன்றி மூன்றாம் நபர் காப்பீடு என்று பொதுவாக கூறப்படும் வாகனத்தால் மூன்றாம் நபருக்கு ஏற்படும் காயம், பொருட்சேதம், உயிரிழப்பு போன்றவைக்கான காப்பீட்டுப் பொறுப்பை மட்டுமே ஈட்டுறுதி செய்வதற்கான காப்பீட்டுத் தவணைத் தொகையல்ல. எவ்வாறாயினும், காப்புறுதி உரிமைகோரல் தாக்கல் செய்யப்பட்டால், அடுத்த ஆவணக் காலத்தில் கோரலின்மை வெகுமதியை இழக்க நேரிடும்[2].

வாகனம் விற்கப்படும் போது[தொகு]

கோரலின்மை வெகுமதி காப்பீடு செய்யப்பட்ட வாகனத்திற்கு அல்ல, காப்பீடு ஆவணதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. எனவே, வாகனத்தை உரிமை மாற்றும் செய்யும் போது, காப்பீட்டு ஆவணத்தை புதிய உரிமையாளருக்கு மாற்றலாமேயன்றி கோரலின்மை வெகுமதியை மாற்ற முடியாது. வாகனத்தின் புதிய உரிமையாளர் காப்பீட்டு ஆவண காலத்தின் மீதமுள்ள காலத்திற்கான காப்பீட்டுத் தவணைத் தொகையிலிருந்து கோரலின்மை வெகுமதியாக கழிக்கப்பட்ட தொகையை ஈடுசெய்ய வேண்டும். இருப்பினும், அசல் உரிமையாளர், பழைய வாகனத்தை வாங்குபவருக்கு காப்பீட்டை மாற்றவில்லை எனில், அவர் வாங்கிய புதிய வாகனத்தில் கோரலின்மை வெகுமதியை பயன்படுத்தலாம். காப்பீட்டு நிறுவனத்துக்கு தனது பழைய வாகனத்தை விற்றது மற்றும் காப்பீட்டைத் தக்கவைத்துக்கொள்ளும் எண்ணம் குறித்து உடனடியாக (எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குப் முன்னர்) தெரிவிக்க வேண்டும். காப்பீடு ஆவணதாரர் புதிய வாகனத்தை வாங்கும்போது, அதன் செல்லுபடியாகும் காலம் வரை பழைய காப்பீட்டு ஆவணத்தில் அது மாற்றப்படும். அசல் காப்பீட்டுச் சான்றிதழ் மூன்று ஆண்டுகளுக்குள் காப்பீட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். புதிய வாகனத்தின் காப்பீட்டுக்காக அறிவிக்கப்பட்ட மதிப்பு அதிகரிப்பின் காரணமாக காப்பீட்டுத் தவணைத் தொகையின் சார்பு விகித வித்தியாசம் செலுத்தப்பட வேண்டும்.

காப்பீட்டு நிறுவனம் மாற்றப்படும் போது[தொகு]

காப்பீட்டு ஆவண புதுப்பிப்பின் போது காப்பீட்டு நிறுவனம் மாற்றப்படுமானால் கோரலின்மை வெகுமதி புதிய காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்படும். இதற்கு தற்போதைய காப்பீட்டாளரிடமிருந்து புதுப்பித்தல் அறிவிப்பின் மூலம் நீங்கள் சம்பாதித்த கோரலின்மை வெகுமதியின் ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதைத் சமர்ப்பிக்க முடியாவிட்டால், காலாவதியாகும் காப்பீட்டு ஆவணத்தின் மீது எந்த உரிமைகோரலும் பதிவு செய்யப்படவில்லை என்ற சான்றிதழுடன் அசல் காலாவதியாகும் காப்பீட்டு ஆவணத்தையும் சமர்ப்பிக்கலாம். எனவே, சான்றுகள் புதுப்பித்தல் அறிவிப்பு அல்லது முந்தைய காப்பீட்டாளரிடமிருந்து கோரலின்மை வெகுமதி உரிமையை உறுதிப்படுத்தும் கடிதமாகவும் இருக்கலாம்.

கோரலின்மை வெகுமதியின் பயன்கள்[தொகு]

இந்த வெகுமதியின் பயன்கள் நிதியை விட அதிகம். முதன்மையானவை பின்வருமாறு.

  • செலவு சேமிப்பு: காப்புறுதி உரிமைகோரல் இல்லாத ஆண்டுகளுக்கான வெகுமதியாக, 50% வரை குறைக்கப்பட்ட காப்பீட்டு தவணைத் தொகையை அனுபவிக்கவும். இது காப்பீட்டுச் செல்வை மலிவாக்குகிறது.
  • காப்பீட்டு ஆவணத் தொடர்ச்சி: ஆவணதாரர்கள் ஒரே காப்பீட்டாளருடன் இருக்க ஊக்குவிக்கிறது, நீண்ட கால உறவுகள் மற்றும் தொடர்ச்சியான வருடங்களாக கோரலின்மை வெகுமதியைக் குவிப்பதன் காரணமாக விசுவாசத்தை வளர்க்கிறது.
  • பரிமாற்றம்: காப்பீட்டாளர்களை மாற்றினால், கோரலின்மை வெகுமதியையும் மாற்றலாம். புதிய காப்பீட்டாளருடன் நீங்கள் திரட்டப்பட்ட நன்மைகளைத் தக்கவைத்து, தள்ளுபடிகளைப் பெறுவதை இது உறுதி செய்கிறது.
  • காப்பீட்டு தவணைத் தொகை உயர்வுகளுக்கு எதிரான பாதுகாப்பு: விபத்து அல்லது உரிமைகோரலுக்குப் பிறகும், கோரலின்மை வெகுமதி காப்பீட்டு தவணைத் தொகைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைத் தடுக்கலாம், உங்கள் காப்பீட்டுச் செலவுகளில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கலாம்.
  • அதிக ஆற்றலெல்லை தாங்குமை: கோரலின்மை வெகுமதி காப்பீட்டு தவணைத் தொகைகளில் கணிசமான அதிகரிப்பு இல்லாமல் உயர் ஆற்றலெல்லை நிலைகளுக்கான அணுகலை எளிதாக்குகிறது. செலவினங்களில் விகிதாசார உயர்வு இல்லாமல் உங்கள் காப்பீட்டுப் பாதுகாப்பை இது மேம்படுத்துகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரலின்மை_வெகுமதி&oldid=3915068" இலிருந்து மீள்விக்கப்பட்டது