கோபி மீன்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோபி மீன்கள் என்பது 800க்கும் மேற்பட்ட சிறப்பினங்களைக் குறிக்கும் பொதுவான பெயர். எலும்புடைய மீன்கள் பெர்சிமார்ஷ் என்னும் வரிசையிலும் கோபியாய்டி என்னும் உள்வரிசையிலும் இடம் பெறுபவை. பொதுவாக அளவில் சிறியவை. பெரும்பாலான முதிர் நிலைக் கோபி மீன்கள் 10 செ.மீ நீளமாகவோ அதற்கு குறைவாகவோ இருக்கும். தற்பொழுது காணப்படும் மிகச்சிறிய முதுகெலும்புடைய உயிரி பிலிப்பைன் பண்டாக மிக்மியா என்னும் கோபி மீனாகும். நீளம் சுமார் 13 மி.மீ ஆகும்.

கோபி மீன்

ஊன் உண்ணிகள். உலகம் முழுதும் காணப்படும். பெரும்பாலானவை கடலடிப் பகுதியில் வாழ்பவை.

பல வண்ணங்களில் காணப்படும் ஒளி ஊடுருவும். உடல் படிகத் தன்மையுடையது.இம்மீன்கள் மணல்,சேற்றுப் பகுதிகளின் வலைகளில் வாழ்பவை. காலிஃபோர்னியாவிலுள்ள சிறிய குருட்டுக் கோபி மீன்கள் பிற உயிரிகளுடன் சேர்ந்து வாழ்பவை. பெரிய மீன்களின் செவுள்களில் ஒட்டிக் கொண்டுள்ள ஒட்டுண்ணிகளை அகற்றித் தூய்மை செய்கின்றன.

முட்டை ஈடுபவை. இம்முட்டைகள் நீரிலுள்ள கடினப் பொருள்களாகிய பாறைகள், மெல்லுடலிகளின் ஓடுகள் ஆகியவற்றுடன் ஒட்டிக்கொண்டிருக்கும்.

கோபியஸ் பாலினிமா தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் கோபி மீனாகும். உடல் ஊதா படர்ந்த கருமை. வால் துடுப்பின் தொடக்கத்தில் மேற்பகுதியில் வெள்ளை அல்லது மஞ்சள் நிற விளிம்பைக் கொண்ட கரும்புள்ளி போன்ற அமைப்புக் காணப்படும். தலை ஓரளவு தட்டையாகவும் முகம் உருண்டையாகவும் இருக்கும். தாடைகள் சமநீளமுடையவை. கீழ்தாடையின் அடிப்பகுதிகளில் சிறிய நீட்சிகள் உள்ளன. சிறிய பற்கள் இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

[1]

  1. அறிவியல் களஞ்சியம் தொகுதி 9
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபி_மீன்கள்&oldid=3523849" இலிருந்து மீள்விக்கப்பட்டது