கோபால் மந்திர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபால் மந்திர்

கோபால் மந்திர் (Gopal Mandir) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் ராசசாகி கோட்டம் உச்சைன் நகரத்தில் அமைந்துள்ளது. துவாரகாதிசு கோவில் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. மகாகாளேசுவர் கோயிலுக்கு அடுத்ததாக உச்சைன் நகரில் உள்ள இரண்டாவது பெரிய கோவில் கோபால் மந்திர் ஆகும். [1] [2]மராத்தா பாணியில் 19 ஆம் நூற்றாண்டில் மராட்டிய மன்னர் தௌலத்ராவ் சிண்டேயின் மனைவி பயாசி பாய் சிண்டேவால் இது கட்டப்பட்டது. உச்சையினியின் முக்கிய சந்தை பகுதியில் கோபால் மந்திர் அமைந்துள்ளது.

இந்தூர் நகரத்திலிருந்து 65 கிமீ தொலைவில் உள்ள உச்சைன் நகரத்தில் இக்கோவில் உள்ளது; [1] உச்சைன் நகரம் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ளது. [3]

அம்சங்கள்[தொகு]

பிரதான கோவிலில் இரண்டு அடி உயர கிருட்டிண பகவானின் சிலை வெள்ளி பூசப்பட்ட பளிங்குகளால் ஆக்கப்பட்டுள்ளது. கிருட்டிணரின் சிலையுடன் கூடுதலாக, இங்கு சிவன், பார்வதி மற்றும் கருடன் சிலைகளும் உள்ளன. இந்த கோவில் வளாகத்தில் கிருட்டிண செயந்தியும் அரிகர் பர்வாவும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. அரிகர் பர்வாவின் போது மகாகாலேசுவர் சோதிர்லிங்கத்தின் படங்கள் கிருட்டிணரை சந்திக்க கொண்டு வரப்படுகின்றன. கோபால் மந்திர் கதவுகள் கசனி முகமது திருடியதாகக் கூறப்படுகிறது. இவை பின்னர் மகாத்சி சிண்டேவால் மீட்கப்பட்டன. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Alam, Mahmamuda. "Puthia temple complex: Developing tourism through architecture" (PDF). BRAC University. p. 30. பார்க்கப்பட்ட நாள் 11 May 2015.Alam, Mahmamuda. "Puthia temple complex: Developing tourism through architecture" (PDF). BRAC University. p. 30. Retrieved 11 May 2015.
  2. "Puthia Rajbari". Chauchala Chhota Govinda Mandir. Rajshahi University Web Page. Archived from the original on 18 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 13 May 2015.
  3. Mikey Leung. Bangladesh. Bradt Travel Guides. பக். 301. https://books.google.com/books?id=TT2z_1ajY4AC&pg=PA301. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்_மந்திர்&oldid=3537506" இலிருந்து மீள்விக்கப்பட்டது