கோபலின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோபலின் (Copaline) என்பது இயற்கையாகத் தோன்றும் ஒரு கரிமப் பொருளாகும். கோபலைட்டு, புதைபடிவ பிசின், அய்கேட்டு பிசின் என்ற பெயர்களாலும் இக்கரிமச் சேர்மம் அடையாளப்படுத்தப்படுகிறது. இயற்கையில் வெளிர் மஞ்சள் நிறத்தில் ஒழுங்கற்ற துண்டுகளாக காணப்படுகிறது. அய்கேட்டு குன்றில் காணப்படும் இலண்டன் களிமண் இதற்கு எடுத்துக்காட்டாகும் [1].

புதிதாக உடைக்கப்படும்போது இச்சேர்மம் பிசின் தன்மையுடன் கூடிய அரோமாட்டிக் மணத்தைக் கொண்டிருக்கிறது. மிதமான வெப்பநிலையிலேயே இது ஆவியாகிறது. எளிதில் தீப்பற்றி புகையை உண்டாக்கும் மஞ்சள் நிற சுவாலையுடன் எரிகிறது. அரிதாக சாம்பலை விட்டுச் செல்கிறது [2].

கோபல் என்னும் மரவகையின் பகுதியாக கனிமப்படுத்தப்பட்ட பகுதியே கோபலின் என்ற கனிமமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1.  ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள்  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "Copalite". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 
  2. WordNet Dictionary (derived from the Webster's Revised Unabridged Dictionary (1913 version) by the C. & G. Merriam Co. Springfield, Massachusetts, USA).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபலின்&oldid=2749991" இருந்து மீள்விக்கப்பட்டது