உள்ளடக்கத்துக்குச் செல்

கோத்தும்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோத்தும்பி என்பது மாணிக்கவாசக சுவாமிகளுடைய திருவாசகம் என்ற ஞானநூலில் இடம்பெறும் பாடல் ஆகும். அதில் மக்களுடைய வாழ்க்கையில் நடைமுறையில் இருந்த உலகியல் வழக்குகளில் தன்னுடைய திருவாசகத்தில் பக்தி இலக்கியமாக யாத்துள்ளார். இறைவனை நாயகனாகவும், குருவை சகியாகவும் உருவகித்துப் பாடியுள்ளார். நாயகனான இறைவன் மேல் தீராத பக்தி கொண்ட நாயகி சோலையில் பறந்து திரியும் இராச வணிடிடம் நீ ரீங்காரம் செய்து பாடும் போது இறைவனுடைய தொன்மைக் கோலத்தையும், பெருமைகளையும் பாடு எனக் கூறுவது போல் பாடப் பட்ட பாடலே கோத்தும்பி ஆகும்.

கோத்தும்பி என்றால் வண்டுகளுக்கெல்லாம் அரசனாக விளங்கும் இராச வண்டைக் குறிக்கும்.

திருக்கோத்தும்பி

[தொகு]
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையுமாட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னைவாவென்றவான் கருணைச்
சுண்ணப் பொன் நீறற்கே சென்றூதாய் கோத்தும்பி
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோத்தும்பி&oldid=2986075" இலிருந்து மீள்விக்கப்பட்டது