கோதாயிம்பர
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

கோதாயிம்பர என்பவன் இலங்கையை ஆண்ட காவன்தீசனின் பத்துத் தளபதிகளில் ஒருவனாவான். இவன் கிரி என்னும் பிரதேசத்தில் நினெமொல்பிட்டிய என்னும் இடத்தில் பிறந்தான். இவன் ஏழு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாவான். உருவத்தில் சிறியவனாக இருந்ததால் கோதாய (சிங்கள அர்த்தம்) என்னும் பெயரால் அழைக்கப்பட்டான். இவன் ஒரு சோம்பேறியாவான். ஒரு நாள் சகோதரர்கள் வயலின் ஒரு பகுதியை தவிர மீதிப் பகுதியை சுத்தம் செய்துவிட்டு மீதியை இவனிடம் கொடுத்தனர். இவன் மிக விரைவில் துப்பரவாக்கினான். இதனால் காவன்தீசன் இவனைத் தன் படையில் சேர்த்துக் கொண்டான்.
தேவநந்தராமய என்னும் ஸ்தூபி[தொகு]
போரில் காமினி வெற்றியடைந்தால் ஒரு ஸ்தூபி நிலைநாட்டப்படவேண்டும் என்று ஒருமுறை சபதம் மேற்கொண்டான். காமினி போரில் வெற்றிபெற்றதும் "தேவநந்தராமய" என்னும் விகாரையை கட்டினான்.
வெளியிணைப்புகள் மற்றும் ஆதாரங்கள்[தொகு]
- ↑ "நூலகம்". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.
- ↑ "The Levying of the Warriors -Ten Giants". 2011-10-08. http://mahavamsa.org/mahavamsa/original-version/23-levying-warriors/.
- ↑ "Ten Giant Warriors", Wikipedia (in ஆங்கிலம்), 2021-10-25, retrieved 2022-08-20