கொள்ளூர் பெருங்கற்காலக் களம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொள்ளூர் பெருங்கற்காலக் களம், திருக்கோயிலூர்ப் பகுதியில் பொன்னி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ஜே. எச். கர்ஸ்டின் என்பவர் 1876ல் இப்பகுதியில் ஆய்வு செய்துள்ளார். இப்பகுதியில் இரண்டு அல்லது மூன்று பெருங்கற்காலக் கற்பதுக்கைகள் இருந்தன. இங்கே இருந்த கற்பதுக்கைகள் செவ்வக வடிவானவை. நாற்புறமும் உள்ள கற்பலகைகள் சாய்ந்துவிடாமல் இருப்பதற்காக எல்லா பலகைகளும் ஒரு பக்கம் சற்று நீட்டி இருக்குமாறு அடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் அளவுகளையும் அவர் எடுத்துள்ளார். இக்கற்பதுக்கைகளில் கருப்பு, சிவப்பு மட்பாண்டத் துண்டுகள், கால்களுடன் கூடிய ஈமப்பேழை போன்றனவும் இருந்தன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. பவுன்துரை, இராசு., தமிழக பெருங்கற்காலக் கட்டிடக்கலை மரபு, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2013. பக். 143-145