உள்ளடக்கத்துக்குச் செல்

கொள்கை வெறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொள்கை வெறி (fanaticism) எனப்படுவது ஒருவர்க்கு பிடித்தமான ஒன்றின் மீதான அதீத பற்று ஆகும். இதைப் பற்றி தத்துவ மேதை ஜார்ஜ் சண்டயானா, மறந்துபோன கொள்கையினை இரண்டு மடங்கு வேகத்தில் அடைய கொள்கை வெறி வித்திடும் என்று கூறுகிறார்.[1] இதைப் பற்றி வின்ஸ்டன் சர்ச்சில் கொள்கை வெறியுடையோன் தன் மனதையோ, தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ள மாட்டான் எனக் கூறியுள்ளார். நெல் போசுடுமேன் என்பவர் தன் நூலான கிரேசி டாக்கில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். கொள்கை வெறிக்கான காரணமே அந்தக் கொள்கையின் தன்மை பொய் இல்லாவிடிலும், உண்மை போல் காட்டப் படுவதும், பொய்யாக்கப்படமுடியாததும் ஆகும்

கொள்கைப் பற்றாளனுக்கும் கொள்கை வெறியுடையோனுக்கும் இடையே வேறுபாடு உண்டு எனவும் குறிப்பிடுகிறார். இது பல வகைப்படும். உணர்ச்சிவசம், சமய ஈடுபாடு, இனம், நாடு, அரசியல், விளையாட்டு ஆகிய ஏதாவது ஒன்றின் மீது கொள்கை வெறி ஏற்படும். [2]

சான்றுகள்

[தொகு]
  1. Santayana, George (1905). Life of Reason: Reason in Common Sense. (New York: Charles Scribner's Sons) 13.
  2. Mackellar, J. (2006). "Fans, fanatics or just good fun - travel behaviours of the leisure fanatic". Journal of Vacation Marketing 12 (3): 195–217. doi:10.1177/1356766706064622. http://intl-jvm.sagepub.com/cgi/content/abstract/12/3/195. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொள்கை_வெறி&oldid=2954851" இலிருந்து மீள்விக்கப்பட்டது