கொலம்பியா விண்வெளி ஓடம் விபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொலம்பியா விண்வெளி ஓடம் விபத்து (Space Shuttle Columbia disaster) பிப்ரவரி 1, 2003 இல் நடந்தது. கொலம்பியா விண்வெளி ஓடம் அமெரிக்காவின் நாசாவால் பயன்படுத்தபட்ட முதல் விண்வெளி ஓடமாகும். STS 107 என்ற விண்வெளி பயணத்தை முடித்து கொண்டு பூமிக்குத் திரும்பி கொண்டிருந்த கொலம்பியா விண்கலம் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்த பொழுது வெடித்து சிதறியது. இந்த விபத்தில் விண்கலத்தில் பயணம் செய்த ஏழு வீரர்களும் மரணமடைந்தனர்.[1][2][3]

விபத்துக்கான காரணம்[தொகு]

STS 107 விண்வெளி திட்டத்தின் தொடக்கத்தில் கொலம்பியா விண்கலம் பூமியில் இருந்து புறப்படும் பொழுதே விண்கலத்தின் வெளிப்புற தொட்டியில் இருந்து நுரை வெளியேற்றம் விண்கலத்தின் இடது இறக்கையை பாதித்து இருந்தது. விண்கலம் பூமிக்கு திரும்பும் பொழுது ஏற்கனவே ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக வளிமண்டலத்தின் சூடான காற்று விண்கலத்துக்குள் புகுந்து விண்வெளி ஓடத்தின் உட்புற இறக்கை அமைப்பை பாதிப்படைய செய்தது. இதுவே விபத்துக்கு காரணமாக அறியப்படுகிறது.

பயணக் குழுவினர்[தொகு]

பயணக் குழுவினர்

இந்தப் பயணத்தில் ஒரு இந்தியப் பெண் உட்பட ஏழு வீரர்கள் உயிரிழந்தனர். அவர்கள் பெயர்கள் பின்வருமாறு:

  • கல்பனா சாவ்லா
  • ரிக். டி. ஹச்பண்ட்
  • வில்லியம் சி. மச்குல்
  • இயான் ராமூன்
  • டேவிட் எம். பிரவுன்
  • லாரல் ப்ளேர் சால்டான் கிளார்க்
  • மைக்கேல் பி. ஆன்டர்சன்

மேற்கோள்கள்[தொகு]

  1. Rogers, William P.; Armstrong, Neil A.; Acheson, David C.; Covert, Eugene E.; Feynman, Richard P.; Hotz, Robert B.; Kutyna, Donald J.; Ride, Sally K; Rummel, Robert W.; Sutter, Joseph F.; Walker, Arthur B.C.; Wheelon, Albert D.; Yeager, Charles E. (June 6, 1986). "Report of the Presidential Commission on the Space Shuttle Challenger Accident" (PDF). NASA. Archived from the original (PDF) on July 13, 2021. பார்க்கப்பட்ட நாள் July 13, 2021.
  2. Jenkins, Dennis R. (2016). Space Shuttle: Developing an Icon – 1972–2013. Forest Lake: Specialty Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1580072496. 
  3. Jenkins, Dennis R. (2001). Space Shuttle: The History of the National Space Transportation System. Stillwater: Voyageur Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0963397454. https://archive.org/details/spaceshuttlehist0000jenk_f6n1.