கொரோனா (ஒளியியல் நிகழ்வு)
வானிலையியலில் கொரோனா அல்லது ஒளிவட்டம் (Corona)சூரியனில் அல்லது நிலாவில் விளிம்பு விளைவால் ஏற்படும் ஒரு ஒளியியல் நிகழ்வாகும்.[1] நட்சத்திரங்களாலும், கோள்களாலும், நீர் துளிகளாலும், மேகங்களிலுள்ள பனிப் படிகங்களாலும், கண்ணாடியின் மேற்பரப்பில் உள்ள மூடுபனிகளாலும் சில நேரங்களில் ஒளிவட்டம் உருவாகிறது. கொரோனா என்பது வானுலக பொருட்களைச் சுற்றி பல மையங்களைக் கொண்ட பல வண்ண வளையங்களைக் கொண்டு மையத்தில் வெளிச்சமான பகுதியைப் பெற்றிருக்கும்.[2][3] மையத்தில் வெளிச்சமான பகுதி (aureole) நிலவின் ஒளிவட்டத்தில் உள்ளது. இது மையத்தில் வெளிர் நீல வட்டமாகவும், ஓரங்களில் செம்பழுப்பு நிறத்துடனும் காணப்படும். ஒளிவட்டத்தின் கோண அளவு, அதை உருவாக்கும் நீர் துளிகளின் விட்ட அளவைப் பொறுத்தது. சிறிய நீர் துளிகள் பெரிய கொரோனாக்களை உருவாக்கும். நீர் துளிகள் ஒரே அளவுடன் இருந்தால் உருவாகும் ஒளிவட்டங்களும் ஒரே பொலிவுடன் இருக்கும். ஒளி எதிரொளிப்பால் உருவாகும் பரிவேடம் விளிம்பு விளைவால் ஏற்படும் கொரோனாக்களிலிருந்து மாறுபடுகிறது. ஆனால் பரிவேடம் கொரோனாக்களை விட பெரிதாக இருக்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cowley, Les (2012). "Jupiter corona from Iran". Atmospheric Optics. பார்க்கப்பட்ட நாள் 2016-05-02.
- ↑ Calvert, J. B., The Corona, University of Denver, 2 August 2003. Access date 11 Feb. 2107
- ↑ Cowley, Les, Corona, Atmospheric Optics. Access date 11 Feb. 2107
வெளியிணைப்புகள்
[தொகு]- Explanation and image gallery - Atmospheric Optics by Les Cowley
- Rings around the sun and moon: coronae and diffraction
- Corona from Fogged Eyeglasses
- Experimental simulations of pollen coronas
- The Corona
காட்சியகம்
[தொகு]-
வனத்தில் உருவாகும் கொரோனா
-
சூரிய கொரோனாவின் எதிரொளிப்பு காட்சி
-
கோல்டன் கேட் பாலத்தில் உருவான சூரிய கொரோனா
-
கோல்டன் கேட் பாலத்தில் உருவான பகுதி கொரோனா
-
நிலவின் கொரோனா