கொனார்க் நடன விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கொனார்க் நடனத் திருவிழா (Konark Dance Festival) என்பது ஒவ்வொரு வருடமும் அனேகமாக பிப்ரவரி 19 முதல் 23-ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறும் ஒரு நடன விழாவாகும். இவ்விழா இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள கொனார்க்கின் சூரியக் கோயிலின் பின்னணியில் நடைபெறுகின்றது[1]. இந்தியாவில் நடைபெறுகின்ற மிகப்பெரிய நடன விழாக்களில் ஒன்றாக இவ்விழா கருதப்படுகிறது.

இக்கோயிலுள்ள அழகிய சாலமாண்டர் அல்லது நடன அரங்கம் ஒரு கட்டிடக்கலை அதிசயம் ஆகும். இவ்வரங்கு சுவரின் ஒவ்வொரு அங்குலமும் பண்டைய காலத்தின் அழகிய நுண்கலை வடிவமைப்புகளால் நிரம்பி உள்ளன. இசைக் கலைஞர்கள் மத்தலம், கைத்தலம் மற்றும் இதர இசைக்கருவிகள் இசைப்பது போன்ற ஒடிசி நடன வடிவங்கள் சிற்பங்களை அலங்கரித்து உள்ளன [2].

நாடு முழுவதும் உள்ள பல புகழ்பெற்ற நடன கலைஞர்கள் இவ்விடத்தில் தங்கள் நடன செயல்திறனை வெளிப்படுத்துவர். 1986 ஆம் ஆண்டு முதல் ஒடிசா சுற்றுலாத்துறை [3] மற்றும் ஒடிசி ஆராய்ச்சி மையமும் இணைந்து இத்திருவிழாவை நடத்துகின்றன [4].பலதரப்பட்ட பாரம்பரிய நடனத்தை ஊக்குவிக்கவும் அதே நேரத்தில் கொனார்க் கோயில் மற்றும் ஒடிசாவை புகழ்மிக்க சுற்றுலா மையங்களாக மாற்றுவதும் இவ்விழா ஏற்பாடு செய்யப்படுவதன் நோக்கமாக கருதப்படுகிறது [5].

மேற்கோள்கள்[தொகு]

  1. Konark Dance Festival in Orissa from 19 - 23 February 2017
  2. "Konark Dance & Music Festival".
  3. "Odisha Tourism" (en).
  4. "Welcome to Guru Kelu Charan Mohapatra Odissi Research Centre".
  5. http://www.orissadiary.com/CurrentNews.asp?id=22768
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொனார்க்_நடன_விழா&oldid=2975511" இருந்து மீள்விக்கப்பட்டது