கொத்து ரொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Kotthu s piletinom.JPG

கொத்து ரொட்டி என்பது ரொட்டி, மரக்கறி, முட்டை, இறைச்சி மற்றும் சுவைப்பொருட்களைச் சேர்த்துக் கொத்தித் தயாரிக்கப்படும் ஓர் உணவு ஆகும். முட்டை, இறைச்சி விரும்பாதவர்கள் அவைகளைத் தவிர்த்து சோயா அல்லது ரோபு போன்றவற்றைச் சேர்க்கலாம். பொதுவாகக் கீழே நெருப்பூட்டப்பட்ட தட்டையான இரும்பு அடுப்புக்கு மேல் வைத்துக் கொத்துவார்கள். இந்த உணவு இலங்கை கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடியில் தோன்றியதாக கூறப்படுகிறது. இன்று இலங்கை முழுவதும், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற உணவாக இது இருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொத்து_ரொட்டி&oldid=2936124" இருந்து மீள்விக்கப்பட்டது