உள்ளடக்கத்துக்குச் செல்

கொண்டை ஊசி வளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அறிவிப்புப் பலகை
மலைச் சாலைகளில் கொண்டை ஊசி வளைவுகள்

கொண்டை ஊசி வளைவு என்பது மலைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சாலைகளின் ஒழுங்கமைவு வடிவம் ஆகும். இது பெண்களின் கொண்டையில் செருகப்படும் ஊசியின் வளைவு போல் உள்ளதால், இப்பெயர் பெற்றது. வாகனங்கள் இந்தப் பகுதிகளில் செல்லும்போது வேகத்தைக் குறைத்துக் கொள்ளுகின்றன. எனவே மையவிலக்கு விசை குறைக்கப்படுகிறது மற்றும் விபத்தும் தடுக்கப்படுகிறது.

தோற்றம்[தொகு]

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட மலைப் பகுதிகளுக்கான சாலைகளில் இவற்றைக் காணலாம். வாகனங்களால் செங்குத்தாக மலையின் மீது முன்னேறிச் செல்ல இயலாத காரணத்தால் கொண்டை ஊசி வளைவுகள் மலைப் பயணங்களில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகும். தொடர்ச்சியான இத்தகைய வளைவுகள் சிலருக்கு தலைசுற்றல், மயக்கம் மற்றும் வாந்தி ஏற்படக் காரணமாக அமையலாம்.


புகைப்பட தொகுப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொண்டை_ஊசி_வளைவு&oldid=1366884" இலிருந்து மீள்விக்கப்பட்டது