கொட்டையுருவுளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலவகையான கொட்டையுருக்களின் தொகுப்பு

கொட்டையுருவுளி அல்லது கொட்டையுரு (Caryopsis) என்பது தவாரவியலில் ஒரு எளிய உலா்கனி வகையாகும். இது ஒற்றைச் சூலிலையினைக் கொண்ட மேம்மட்ட சூற்பையிலிருந்து உருவான சிறிய ஒற்றை விதையுடன் கொண்ட உலரா வெடியாக் கனியாகும். இதில் கனித்தோல் விதையுறையுடன் இணைந்து காணப்படுகிறது. இந்தக்கனி நிலைத்துள்ள பூவடிச் செதிலாலும், பூக்காம்புச் செதிலாலும் மூடப்பட்டுள்ளது எ.கா: நெல்.

கொட்டையுருவுளி கனிகள் தானியங்கள் என அழைக்கப்படுகிறது. இவ்வகையானது கோதுமை, நெல், சோளம் ஆகியவற்றை உள்ளடக்கிய போயேசி அல்லது கிராமினி குடும்பத்திற்கு உரிய கனி வகையாகும்.[1]

கோதுமைக் கதிர்-வெளிப்பக்கமாகத் தெரியும் மூன்று மகரந்தப்பைகளுடன்
கொட்டையுருவின் குறுக்கு-வெட்டுத்தோற்றம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "caryopsis". Encyclopædia Britannica. Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 31 August 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொட்டையுருவுளி&oldid=3913090" இலிருந்து மீள்விக்கப்பட்டது