கைக்கிளை (பாடல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கைக்கிளை என்னும் சொல் ஆகுபெயராக மாறி இருவேறு பொருள்களை உணர்த்துகிறது. ஒன்று கைக்கிளைத் திணை. மற்றொன்று கைக்கிளைப் பொருள்கொண்டு பாடப்பட்ட கைக்கிளைச் சிற்றிலக்கியம்.

தொல்காப்பியம் கைக்கிளைத் திணையை அகப்பொருள் பாகுபாட்டில் வரும் திணையாக வகைப்படுத்தியுள்ளது. புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூல் கைக்கிளைப் பொருளைப் புறத்திணைப் பொருளாக்கி 12 திணைகளில் ஒன்றாக வகைப்படுத்திக் காட்டுகிறது.

புறநானூற்றில் நக்கண்ணையார் பாடிய மூன்று பாடல்கள் கைக்கிளைத் திணை எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.

அடிக்குறிப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைக்கிளை_(பாடல்)&oldid=1631056" இருந்து மீள்விக்கப்பட்டது