கே. வி. சுப்பிரமணிய ஐயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே. வி. சுப்பிரமணிய ஐயர் (1875-1969) ஒரு பெயர் பெற்ற தமிழ்க் கல்வெட்டியலாளர். 1908 ஆம் ஆண்டில் கல்வெட்டு அலுவலகத்தில் பணியில் அமர்ந்தார். 1932 ஆம் ஆண்டுவரை அங்கே 26 வருடங்கள் பணியாற்றினார். தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுப்பின் ஆறாம், ஏழாம், எட்டாம் தொகுதிகளின் தொகுப்பாசிரியர் இவரே. இவர் எழுதிய பல ஆய்வுக் கட்டுரைகள் "எப்பிகிராபியா இன்டிக்கா" என்னும் இந்தியக் கல்வெட்டுயியல் சஞ்சிகையில் வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டில் கிடைத்த பண்டைக்காலத்தைச் சேர்ந்த தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்களின் ஆய்வுகளில் இவர் முன்னோடியாகத் திகழ்ந்தார். திருவிதாங்கூர் தொல்லியல் வரிசையின் இரண்டாம், மூன்றாம், நான்காம் தொகுதிகளுக்கும் இவர் ஆசிரியராக இருந்துள்ளார். "பண்டைய தக்காணத்தின் வரலாற்றுக் குறிப்புக்கள்" (Historical Sketches of Ancient Dekhan) என்னும் ஒரு ஆய்வு நூலையும் இவர் எழுதி வெளியிட்டார். இது மூன்று தொகுதிகளைக் கொண்டது.

தமிழ்க் குகை கல்வெட்டுகள் பற்றிய ஆராய்ச்சியிலும் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு.[1] இவர் தமிழ்க் கல்வெட்டுகளின் தந்தை என்றழைக்கப்படுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]