கேத்தரின் ஸ்விட்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கேத்ரின் ஸ்விட்சர்
Kathrine Switzer
Kathrine Switzer at the 2011 Berlin Marathon Expo.jpg
பிறப்புசனவரி 5, 1947 (1947-01-05) (அகவை 74)
ஜெர்மனி, ஆம்பெர்கில்
கல்விஜார்ஜ் சி மார்ஷல் உயர்நிலைப் பள்ளி
படித்த கல்வி நிறுவனங்கள்சிரக்கியூஸ் பல்கலைக்கழகம்
பணிஓட்டவீரர், எழுத்தாளர்
வாழ்க்கைத்
துணை
டாம் மில்லர் (1968–1973)
பிலிப் ஷூப்
ரோஜர் ராபின்சன் (1987–)
வலைத்தளம்
www.kathrineswitzer.com

கேத்தரின் ஸ்விட்சர் (Kathrine Switzer, பிறப்பு 5, சனவரி 1947, ஜெர்மனியின் ஆம்பெர்கில்[1]) என்பவர் ஒரு அமெரிக்க எழுத்தாளர், தொலைக்காட்சி விமர்சகர், 1967 இல் மராத்தான் ஓட்ட வீரர் ஆவார்.[2] இவரே போஸ்டன் மராத்தானில் வீரருக்கான எண் பெற்று ஓடி நிறைவுசெய்த முதல் பெண்மணி ஆனார். அக்கால கட்டத்தில் போஸ்டன் மராத்தானில் பெண்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லாத நிலையில் 1967 ஆம் ஆண்டு கேத்ரின் கே.வி. ஸ்விட்சர் என்ற பெயரில் பதிவுசெய்து ஒடினார். ஓடும்போது இவர் பெண் என்பதை உணர்ந்த அதிகாரிகள் இவரைப் பிடித்துத் தள்ளினர், இருந்தாலும் கேத்ரின் தன்னுடைய நண்பரின் உதவியால் மீண்டும் எழுந்து ஓடி தொலைவைக் கடந்தார். பல போராட்டங்களுக்குப் பிறகு 1972 ஆம் ஆண்டுதான் பெண்களை போஸ்டன் மராத்தானில் அதிகாரப்பூர்வமாக அனுமதித்தனர்.[3]

வாழ்க்கை[தொகு]

சுவிட்சர் ஜேர்மனியில் பிறந்தவர், இவரின் தந்தை அமெரிக்க இராணுவத்தில் மேஜராக இருந்தார். இவரது குடும்பம் 1949 இல் அமெரிக்கா திரும்பியது. [4] இவர் வர்ஜீனியாவிலுள்ள ஃபேர்ஃபாக்ஸ் கவுண்டிஸில் ஜார்ஜ் சி மார்ஷல் உயர்நிலைப் பள்ளியில் படித்தார், பின்னர் சைரகுஸ் பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்தார். [5] 1968 இல் இளங்கலை பட்டத்தையும், 1972 இல் முதுகலை பட்டத்தையும் பெற்றார்.

1967 பாஸ்டன் மராத்தான்[தொகு]

கேத்ரின் ஓடுவதில் ஆர்வம்கொண்டராக இருந்தார். எவ்வளவோ முயற்சி செய்தும் மாரத்தானில் பெண்களால் ஓட அனுமதியில்லை என்றனர். பெண் என்ற ஒரே காரணத்துக்காக அனுமதி மறுக்கப்பட்டதை கேத்ரினால் ஏற்றுக்கொள்ள இயலாமல், 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற மாரத்தானில் கே. வி. ஸ்விட்சர் என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாகத் தன்னைப் பதிவு செய்துகொண்டார். பெயரைப் பார்த்து யாருக்கும் சந்தேகம் வரவில்லை. 261 என்ற எண்ணில் களத்தில் வீரர்களுடன் நின்றார் கேத்ரின். போட்டி ஆரம்பமானது. இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தார். சில மைல் தூரத்துக்குப் பிறகு கேத்ரினைக் கண்டுகொண்ட அதிகாரிகள் ஆத்திரமடைந்தனர். அவரைப் பிடித்துத் தள்ளினர். அவர் அணிந்து வந்த எண்ணைப் பறிமுதல் செய்தனர். அந்தக் காட்சிகள் ஒளிப்படங்களில் பதிவானது.

தன்னுடைய நண்பரின் உதவியால் மீண்டும் எழுந்து ஓட ஆரம்பித்தார். 4 மணி 20 நிமிடங்களில் மாரத்தான் தூரத்தைக் கடந்தார். இதே மாரத்தான் போட்டியில் கிப் பாபி என்ற பெண்ணும் அதிகாரபூர்வமாகப் பதிவு செய்யாமல் முழு தூரத்தையும் கடந்தார். அதிகாரபூர்வமாகப் பதிவு செய்து ஓடிய முதல் பெண் என்ற பெருமை கேத்ரினுக்குக் கிடைத்தது. இந்தப் போட்டியில் கலந்துகொண்ட இரண்டு பெண்களும் மாரத்தான் தூரத்தை முழுமையாகக் கடந்து, பெண்களாலும் ஓட முடியும் என்று உலகத்துக்கு உணர்த்தினார்கள்.

கேத்ரினும் இன்னும் சில பெண்களும் மாரத்தானில் ஒட பெண்களுக்கு அனுமதி வேண்டும் என்று தொடர்ந்து போராடினார்கள். அதன் விளைவாக 1972 ஆம் ஆண்டு முதல் பெண்கள் மாரத்தானில் அனுமதிக்கப்பட்டார்கள். இதுவரை 30 மாரத்தான் போட்டிகளில் கேத்தரின் பங்கேற்றிருக்கிறார். ’261 Fearless’ என்ற அமைப்பை ஆரம்பித்து, பெண்களுக்குத் தடகளப் பயிற்சிகளை அளித்து, தைரியத்தையும் தன்னம்பிக்கையும் ஊட்டிவருகிறார். கேத்ரினின் பொன்விழா ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில் அவருக்கு வழங்கப்பட்ட 261 எண்ணை இனி யாருக்கும் வழங்கப் போவதில்லை என்றும் மாரத்தான் கமிட்டி அறிவித்தது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Milde, Horst (June 2, 2010). "Kathrine Switzer and Roger Robinson visit the Berlin Sports Museum". German Road Races e.V.. http://www.germanroadraces.de/274-1-16454-kathrine-switzer-and-roger-robinson-visit-the.html. பார்த்த நாள்: March 19, 2013. 
  2. Lorge Butler, Sarah (April 12, 2012). "How Kathrine Switzer paved the way". ESPN-W. http://espn.go.com/espnw/more-sports/7803502/2012-boston-marathon-how-kathrine-switzer-paved-way-female-runners. பார்த்த நாள்: July 13, 2012. 
  3. Lodge, Denise (April 16, 2012). "Kathrine Switzer: Empowerment through Running". Impowerage Magazine. http://impowerage.com/not-too-late/active/kathrine-switzer-empowerment-through-running. 
  4. எஸ்.சுஜாதா (2017 ஏப்ரல் 23). "பக்கத்து வீடு: கேத்ரின் 261". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 23 ஏப்ரல் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேத்தரின்_ஸ்விட்சர்&oldid=2895442" இருந்து மீள்விக்கப்பட்டது