கூம்புக் குடுவை
Jump to navigation
Jump to search
ஆய்வுகூடங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஆய்வுகூடக் குடுவை கூம்புக் குடுவை ஆகும். இது தட்டையான அடித்தளத்தையும், கூம்புருவான உடலையும், உருளை வடிவமான கழுத்தையும் கொண்டது. இதனை 1861இல் எமில் எர்லென்மெயர் என்ற சேர்மானிய வேதியியலாளர் பெயரிட்டார். இது எர்லென்மெயர் குடுவை எனவும் அழைக்கப்படும்.
கூம்புக் குடுவைகளில் அளவு கோடு இடப்பட்டிருப்பதுடன் பென்சிலால் சுட்டிப்படுத்தக் கூடியதான பகுதியையும் கொண்டிருக்கும். இது ஒடுங்கிவிரியும் உடலமைப்பு காரணமாக முகவைகளிலிருந்து வேறுபடுகிறது.
சிறப்புப் பண்புகள்[தொகு]
- வளைவான ஒருங்கிய வாயைக் கொண்டிருப்பதால் தக்கை அல்லது பருத்திப் பஞ்சு அடைப்பான்களால் மூடக்கூடியதாயிருத்தல்.
- கண்ணாடி நிறுத்தியில் பொருத்தக் கூடியதான கட்டமைப்புகளைக் கொண்டிருத்தல்.
- குடுவை வடிவம் சோதனைகளின் போது கலக்குவதற்கு வசதியாயிருத்தல்.
- ஒடுங்கிய கழுத்து திரவப்பொருட்கள் வெளியே சிந்துவதைத் தடுப்பதுடன் ஆவியாதலையும் குறைக்கிறது
பயன்கள்[தொகு]
வேதியியல் திரவங்களை வெப்பப்படுத்தலில் பயன்படும்.