உள்ளடக்கத்துக்குச் செல்

கூட்டுத் தொலைபேசி அழைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூட்டு அழைப்பு ஒன்றை ஏற்படுத்தவென வடிவமைக்கப்பட்ட ஒரு பாலிகாம் (Polycom) தொலைபேசி.

கூட்டுத் தொலைபேசி அழைப்பு (conference call) என்பது தொலைபேசி அழைப்பு ஒன்றை அழைப்பவர் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் ஒரே நேரத்தில் பேசவும் அழைக்கப்பட்ட நபர்களும் பேச்சில் பங்கேற்கவும் உதவும் ஒரு முறை ஆகும். இந்தக் கூட்டு அழைப்பு அழைக்கப்பட்டவர்களும் பங்கேற்கும் படியாகவோ அல்லது அழைப்பவர் பேசுவதை மட்டும் கேட்கும் படியாகவோ தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும். அது சில சமயம் தொலைக் கூட்ட ஒலி (ATC, Audio Tele-Conference) என்று குறிப்பிடப்படுகிறது.

கூட்டு அழைப்புகள் அழைக்கப்படுபவர்கள் அனைவரையும் அழைப்பில் இணத்துக்கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும். இருப்பினும், பங்கேற்பவர்கள் தாங்களாகவே கூட்டு அழைப்பில் இணைந்து பேசவும் வாய்ப்புள்ளது. அதற்கு அவர்கள் "கான்ஃப்ரன்ஸ் பிரிட்ஜ்" (conference bridge) என்ற குறிப்பிட்ட கருவியின் மூலம் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை சுழற்றி தங்களை இணைத்துக் கொள்ளலாம்.[1][2][3]

கூட்டு அழைப்பில் பங்கேற்கும் அனைவரையும் இணைக்கும் கூட்டுப் பாலத்தை (conference bridge) செவ்வனே கவனிக்க நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட நபரை பயன்படுத்திக் கொள்கின்றனர். இவர் அழைப்பில் பங்கேற்பவர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் தபால் பெட்டி எண்கள் ஆகியவற்றை தந்து கூட்டு அழைப்பு நடத்த உதவுவார்.

மிகக் குறைவாக மூன்று வழி அழைப்புகள் (Three-way calling) என்பது அதிகப்படியான கட்டணத்தில் வீட்டு தொலைபேசிகளையோ அல்லது அலுவலகத் தொலைபேசிகளையோ இணைக்க உதவுகிறது. இந்த மூன்று வழி அழைப்பிற்கு, முதலில் அழைக்கப்பட்டவரின் எண் சுழற்றப்படுகிறது. பிறகு ஹுக் ஃப்ளாஷ் பொத்தான் (அல்லது மறு அழைப்புப் பொத்தான்) அழுத்தப்படுகிறது. பிறகு மற்றொரு நபரின் தொலைபேசி எண் சுழற்றப்படுகிறது. அந்த அழைப்பு மணி ஒலிக்கும் போதே ஃப்ளாஷ் பொத்தானை மீண்டும் அழுத்தவேண்டும். அப்பொழுதுதான் மூன்று நபர்களின் தொலைபேசிகளும் ஒன்றுடனொன்று இணைக்கப்படும். இது ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள ஒரு அழைப்பிற்கு இரண்டாவது வெளிச் செல்லும் அழைப்பை அனுமதிக்கிறது.

பயன்பாடு

[தொகு]

தொழில்

[தொகு]

கேளிக்கை இணைப்பு

[தொகு]

குறைந்த கட்டண கூட்டழைப்புகள்

[தொகு]

முன்னதாகவே பணம் செலுத்தப்பட்ட கூட்டழைப்புகள்

[தொகு]

இலவச கூட்டழைப்புகள்

[தொகு]

உபரிக்கான கூட்டழைப்புகள்

[தொகு]

குறைகளுக்கான பொதுவான காரணங்கள்

[தொகு]

IMSல் கூட்டழைப்புகள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]