உள்ளடக்கத்துக்குச் செல்

குவாட்றன்டிட் எரிகற் பொழிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவாட்றன்டிட் விண்கற் பொழிவு

குவாட்றன்டிட் எரிகற் பொழிவு அல்லது குவாட்றன்டிட் விண்கற் பொழிவு (Quadrantid meteor shower) ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதத்தில் நிகழும் எரிகற் பொழிவாகும். இந்த எறிகற் பொழிவின் கதிர்விடு புள்ளி இடப விண்மீன் குழுவில் அமைந்துள்ளது. இது பெருங்கரடி விண்மீன் தொகுதிக்கும் ட்ராகோ விண்மீன் தொகுதிக்கும் இடையில் அமைந்துள்ளது.[1] இவ் எரிகற் பொழிவின் மூலம் 2003 EH1 என்றழைக்கப்படும் சீர் பருவ எரி விண்மீன் ஆகும். குவாட்றன்டைற்ஸ் எரிகற் பொழிவு பின்னிரவிலிருந்து அதிகாலை 4 மணி வரை காணலாம்.

அடல்பீ குவாட்டலெட் மற்றும் புருசெல் ஆகியோர் இதனை 1830இல் இதனை முதன் முதலில் அவதானித்தனர்.[1] இவ் எரிகற்பொழிவு ஒடுங்கியதாகவும் ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு உட்பட்ட விண் பாகங்களில் இருந்து வந்தாகவும் கருதப்படுகின்றது. [1] இது சீர் பருவ எரி விண்மீன் 2003 EH1 இருந்து வந்ததாக சில ஆய்வுகள்( [1])குறிப்பிடுகின்றன. இது வால் வெள்ளியான C/1490 Y1 [2] இன் சிதைந்த பாகங்கள் எனக் கருதப்படுகின்றது.

2012இன் முதலாவது எரிகற் பொழிவு[தொகு]

இவ் எரிகற் பொழிவு 2012 ஆம் ஆண்டு சனவரி 3ந் திகதி பின்னிரவிலிருந்து 4ந் திகதி அதிகாலை வரைக் தொடர்ந்து காணப்பட்டது. இலங்கை, இந்திய நாடுகளில் 3ந் திகதி இரவு முதல் 4ந் திகதி அதிகாலை 4.00 மணி வரையும் காணப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Stellar Meteor Shower Jan. 3". Space.com. பார்க்கப்பட்ட நாள் 2009-01-03.
  2. 2003 EH1 Is the Quadrantid Shower Parent Comet

வெளி இணைப்புகள்[தொகு]