குவர்ட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
QWERTY விசைப்பலகை

குவர்ட்டி (QWERTY) என்பது சில தட்டச்சுக்கருவிகள், கணினி விசைப்பலகை மற்றும் செல்லிடப் பேசி விசைப்பலகைகளில் ஆங்கில எழுத்து விசைகள் அமைந்திருக்கும் விதம் ஆகும். குவர்ட்டி என்பது Q-W-E-R-T-Y எனும் 6 ஆங்கில எழுத்துக்களைக் குறிக்கிறது. இந்த எழுத்துக்கள் இடமிருந்து வலமாய் வரிசையாய் அமைந்திருப்பதால் இப்பெயர் பெற்றது.

குவர்ட்டி வடிவமைப்பு கிறிசுடோஃபர் ஷோல்ஸ் (Christopher Sholes) என்பவாரால் 1874 ஆம் ஆண்டு காப்புரிமையிடப்பட்டு அதே ஆண்டு இ. ரெமிங்க்டன் மற்றும் மகன்களுக்கு (E. Remington and Sons) விற்கப்பட்டது.[1]

வரலாறு[தொகு]

முதன் முதலில் தட்டச்சுக் கருவிகளில் அகரவரிசையில் தான் எழுத்துகள் அமைந்திருந்தன. எனினும் பயனர்கள் பழகப் பழக அவர்களின் வேகம் அதிகரித்து விசைகளுடன் இணைக்கப்பட்டிருந்த கம்பிகள் சிக்க ஆரம்பித்தன. ஜேம்சு டென்சுமோர் என்பவர் அளித்த ஆலோசனைப்படி கிறிஸ்டோஃபர் குவர்ட்டி முறையை உருவாக்கினார். எனவே குவர்ட்டி முறை தட்டச்சு வேகத்தைக் குறைக்கவே உருவாக்கப்பட்டது என சிலர் கூறுகின்றனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Patented in 1874".[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Schadewald, Robert. "The Literary Piano", Technology Illustrated, December, 1982 – January 1983.


"https://ta.wikipedia.org/w/index.php?title=குவர்ட்டி&oldid=3241134" இலிருந்து மீள்விக்கப்பட்டது