குழ. கதிரேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குழ.கதிரேசன் (பிறப்பு: அக்டோபர் 17, 1949) என்பவர் குழந்தைகளுக்கான கதை, கவிதை எழுதியவர்.

இளமைப் பருவம்[தொகு]

இவரின் பெற்றோர் சு. கதி. குழந்தையன் - செல்லம்மை ஆவர். இவர் அக்டோபர் மாதம் பதினேழாம் நாள் 1949 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் ஊர் இராயவரம்.இது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.

இலக்கியப் பணி[தொகு]

குழ. கதிரேசன் முந்நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை வெளியிட்டுள்ளார். ஒலிப்பேழைகள் பல தயாரித்து மழலையர்களுக்கென வழங்கியுள்ளார்.[1]

விருது[தொகு]

தமிழ் மொழியில் 2016–ம் ஆண்டுக்கான பால சாகித்திய புரஸ்கார் விருது பெற எழுத்தாளர் குழ.கதிரேசன் தேர்வாகினார். ஒட்டுமொத்த குழந்தைகள் இலக்கிய பங்களிப்பை வழங்கியதற்காக இந்த விருது இவருக்கு வழங்கப்பட்டது.[2] [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஏழாம் வகுப்பு,தமிழ். செய்யுள்: தமிழ் நாட்டுப் பாடநூல் கழகம். 2007. பக். 69. 
  2. "சாகித்ய அகாடமியின் ‘புரஸ்கார்’ விருது தமிழ் எழுத்தாளர்கள் குழ.கதிரேசன், லட்சுமி சரவணகுமார் தேர்வு" (சூன் 17 2016). பார்த்த நாள் 29 சூன் 2017.
  3. "BAL SAHITYA PURASKAR (2010-2016)". Sahitya Akademi.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குழ._கதிரேசன்&oldid=2715567" இருந்து மீள்விக்கப்பட்டது