குழந்தை சுரண்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


குழந்தை சுரண்டல்

குழந்தை ஈடுபடும் பணிகளில் உழைப்பு சுரண்டலோ, பாலியல் சுரண்டலோ இருக்குமேயானால் அது கல்வி பயில இடையராக அமையும். அக்குழந்தை சுரண்டலுக்கு ஆளாகியுள்ளது.

குழந்தைகள் என்பவர் யார்?[தொகு]

சாதி, மதம்,பால், மொழி, சொத்து, நிறம், பிறப்பு, ஊனம் போன்ற எந்தவித வேறுபாடுகளுமின்றி 18 வயதிற்கு உட்பட்ட அனைவரும் குழந்தைகள்.

குழந்தை உரிமைகள் மீதான ஐ.நா.உடன்படிக்கை:-[தொகு]

1989-நவம்பர் மாதம் குழந்தை உரிமைகள் மீதான உடன்படிக்கையை ஐ.நா.சபை அறிவித்தது. 54~ரத்துக்களை உள்ளடக்கிய இந்த உடன்படிக்கையில் கூறப்பட்டிருக்கும் குழந்தை உரிமைகள் அனைத்தும் மனித உரிமைகளாகும். 1992-டிசம்பர் மாதம் நம் நாடும் ஐ.நா.உடன்படிக்கையில் கையொப்பமிட்டு நம் குழந்தைகளுக்கு உரிமைகளை வழங்க பொறுப்பேற்றது. குழந்தைகளுக்கு வாழும் உரிமை, பாதுகாப்பு உரிமை, வளர்ச்சி உரிமை,பங்கேற்பு உரிமை உள்ளது.

குழந்தை சுரண்டல் முறைகள்:-[தொகு]

  • அடமானம் வைத்தல்
  • பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல்
  • ஆபாச படங்கள் எடுக்க பயன்படுத்துதல்
  • பிச்சை எடுக்க வைத்தல்
  • ஆபத்தான தொழிலில் ஈடுபடுத்துதல்
  • முழுநேர வீட்டு வேலை
  • பண்ணை சார்ந்த வேலைகள்
  • சிறுதொழில் மற்றும் கைத்தொழில்களில் ஈடுபடுத்தல்

குழந்தை சுரண்டல் - பாதிப்பு[தொகு]

  • குழந்தை பருவம் சுதந்திரம் பறிபோதல்
  • தனிமை நிலை
  • உடல் பாதிப்பு
  • பாலியல் துன்புறுத்தல்
  • பெரியோரின் துன்புறத்தல்
  • நோய் தாக்கம்
  • உழைப்பு சுரண்டல்
  • குழந்தை கடத்தல்

குழந்தை பாதுகாப்பு சட்டம்:-[தொகு]

  • அரசியல் அமைப்பு சாசனத்தின் 14-வது கோட்பாடு சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
  • 15-வது கோட்பாட்டின்படி எந்த ஒரு குழந்தையையும் பாகுபடுத்தக் கூடாது.
  • சுரண்டப்படுதல்.பொருளாதாரம் காரணமாக நிராதரவாக விடப்படுதலிலிருந்து காப்பாற்ற 30-ன் பிரிவுகள் இ.எப்
  • 24-வது கோட்பாட்டின்படி 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை தொழிற்சாலைகளில் அனுமதிக்கக்கூடாது.
  • 21யு-யின்படி 6 முதல் 14 வயது வரை கட்டாய இலவச கல்வி.

[1]

  1. குழந்தைப்பாதுகாப்பு மற்றும் பெண்கள் கடத்தலை தடுத்தல்-கிராமக்கண்காணிப்பு குழுவிற்கான கையேடு,யுனிசெப்
"https://ta.wikipedia.org/w/index.php?title=குழந்தை_சுரண்டல்&oldid=3179194" இலிருந்து மீள்விக்கப்பட்டது