குளோரின் நான்காக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குளோரின் நான்காக்சைடு (Chlorine tetroxide) என்பது ClO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட குளோரின் ஆக்சைடு சேர்மமாகும்

வரலாறு[தொகு]

மோசசு கோம்பெர்க்கின் 1923 கோரிக்கை[தொகு]

பிரபல தனியுறுப்பு வேதியியலாளர் மோசசு கோம்பெர்க்கு 1923 ஆம் ஆண்டில் குளோரின் நான்காக்சைடு தயாரிப்பு முறை ஒன்றை முன்மொழிந்தார். நீரிலி ஈரெத்தில் ஈதரில் அயோடின் மற்றும் வெள்ளி பெர்குளோரேட்டு வினைபுரிந்தால் குளோரின் நான்காக்சைடு தயாரிக்கலாம் என்று அவர் பரிந்துரைத்தார்[1]

I2 + 2 AgClO4 → 2 AgI + (ClO4)2.

எனினும் பின்னர் வந்த ஆய்வாளர்கள் இவ்வினையின் விளைபொருள் குளோரின் நான்காக்சைடு அல்லவென்றும் அச்சேர்மம் அயோடின் பெர்குளோரேட்டு என்றும் வாதிட்டனர்[2]. இன்று வரையிலும் அயோடின் பெர்குளோரேட்டு என்றொரு சேர்மம் இருப்பதற்கான எந்தவொரு சான்றும் கிடைக்கவில்லை.

இயகசின் 1968 கோரிக்கை[தொகு]

1968 ஆம் ஆண்டில் இயகசு என்பவர் 77 கெல்வின் வெப்பநிலையில் பொட்டாசியம் குளோரேட்டை காமா கதிர்வீச்சுக்கு உட்படுத்தி குளோரின் நான்காக்சைடைத் தொகுத்தார். இங்கு இருகுளோரின் ஏழாக்சைடு சிதைவடையும் வினையின் இடைவிளை பொருளாக இச்சேர்மம் இருக்கிறது.

பண்புகள்[தொகு]

குளோரின் நான்காக்சைடின் எலக்ட்ரான் நாட்டச் சக்தியை பெர்குளோரேட்டுகளின் அணிக்கோவை ஆற்றல் மற்றும் பார்ன் – ஏபர் சுழற்சி தரவுகளின் வழியாக மதிப்பிட்டனர். இம்மதிப்பு 561 கி.யூ/மோல் ஆகும்.[3]

குளோரின் நான்காக்சைடின் படிக அமைப்பில் தெளிவில்லை மற்றும் இதனுடைய அமைப்புச் சீரொழுங்கு Cs அல்லது C2v. ஆக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gomberg, M. (1 February 1923). "The Reaction Between Silver Perchlorate and Iodine. Chlorine Tetra-Oxide". Journal of the American Chemical Society 45 (2): 398–421. doi:10.1021/ja01655a017. 
  2. Alcock, N. W.; Waddington, T. C. (1 January 1962). "478. The reaction between iodine and silver perchlorate". Journal of the Chemical Society (Resumed): 2510. doi:10.1039/JR9620002510. 
  3. வார்ப்புரு:Zh-hans张青莲. 《无机化学丛书》第六卷:卤素、铜分族、锌分族. 北京: 科学出版社. பக். 272. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:7-03-002238-6. 
  4. Kopitzky, Rodion; Grothe, Hinrich; Willner, Helge (16 December 2002). "Chlorine Oxide Radicals ClOx (x=1-4) Studied by Matrix Isolation Spectroscopy". Chemistry - A European Journal 8 (24): 5601–5621. doi:10.1002/1521-3765(20021216)8:24<5601::AID-CHEM5601>3.0.CO;2-Z.