குளிர்விப்பு கோபுரம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
குளிர்விப்பு கோபுரம் (cooling tower) என்பது ஒரு அமைப்பு அல்லது வளிமண்டலத்தில் உள்ள தேவையற்ற வெப்பத்தை, குளிர்ந்த நீர் பாய்ச்சலின் மூலம் நீக்கும் அமைப்பு ஆகும்.
பொதுவாக பாறைநெய் தூய்விப்பாலை, அனல் மின் நிலையம், இரசாயனத் தொழிற்சாலை மற்றும் கட்டிட சூழ்நிலை கட்டுப்பாட்டகத்தில் பயன்படுகிறது.
குளிர்விப்பு கோபுரம் இரண்டு முக்கிய வகைகளை உடையது
1. இயல்பான வெப்பச்சலன முறை
2. தூண்டப்பட்ட வெப்பச்சலன முறை
தொழில்துறை குளிர்விப்பு கோபுரங்கள்[தொகு]
தொழில்துறை குளிர்விப்பு கோபுரங்கள், ஒரு அமைப்பு அல்லது உலோகங்களிருந்து வெப்பத்தை நீக்க உதவும்.முக்கியமாக மிகப் பெரிய தொழில்துறை குளிர்விப்பு கோபுரங்கள், மின் நிலையங்கள், பாறைநெய் தூய்விப்பாலை, இரசாயனத் தொழிற்சாலைகளில் மற்றும் இயற்கை எரிவளி உபயோகிக்கும் தொழிற்சாலைகளில் குளிர் நீர் சுழற்சி அமைப்பில் உள்ள நீரில் வெப்பத்தை நீக்க பயன்படுகிறது.
700 மெகா வாட் மின்சாரம் தாயரிக்கும் ஒரு மின்நிலையத்தில் 71,600 கன மீட்டர் சுழற்சி விகிதத்தில் நீர் சுழற்சி நடைபெரும்.