குறியீட்டுக் கணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கணிதத்தில் எந்தவொரு கணத்திலும் அதன் அனைத்து உறுப்புகளுக்கும் குறியீடுகள் தரலாம். அவ்விதம் தரப்படும் குறியீடுகளைக் கொண்ட கணம், தரப்பட்ட கணத்தின் குறியீட்டுக் கணம் (Index set) எனப்படும். A என்ற கணத்தின் உறுப்புகளுக்கு இடப்பட்ட குறியீடுகளைக் கொண்ட கணம் J எனில் J குறியீட்டுக் கணம் என அழைக்கப்படும். குறியிடல் J லிருந்து A க்கு வரையறுக்கப்படும் ஒரு முழுக்கோப்பாக அமையும். குறியிடப்பட்டவை குறியிடப்பட்ட குடும்பம் (indexed family) ஆகும்.

குறியிடப்பட்ட குடும்பம் பின்வருமாறு எழுதப்படுகிறது:

எடுத்துக்காட்டுகள்[தொகு]

  • ஒரு கணம் S இன் உறுப்புகளுக்கு முதலாவது உறுப்பு, இரண்டாவது உறுப்பு, மூன்றாவது உறுப்பு.... என எண்ணிக்கை தரும்போது குறியீட்டுக் கணம் கிடைக்கிறது.
  • எனில் குறியீட்டுக் கணம்:
  • ஒரு எண்ணுறு முடிவிலா கணத்தின் குறியீட்டுக் கணம்:

இயல் எண்கள் கணம் .

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறியீட்டுக்_கணம்&oldid=2745902" இருந்து மீள்விக்கப்பட்டது