குறத்திப்பாட்டு
Appearance
குறத்திப்பாட்டு 96 வகைத் தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. இவ்விலக்கியத்தில் அகவல், வெண்பா, தரவு, கொச்சகம்,கலித்துறை, கழிநெடில் விருத்தம், கலிவிருத்தம் ஆகிய இயற்றமிழ் செய்யுள் வகைகள் இடம்பெற்றிருக்கும். இடைக்கிடையே சிந்து போன்ற நாடகத்தமிழ் கூறுகளும் இடம் பெறலாம்.
குறத்திப்பாட்டுப் பற்றி, பன்னிரு பாட்டியல் விளக்குகிறது. இப்பாட்டு இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற முக்காலம் பற்றிக் கூறும் என்கிறது.
இறப்புநிகழ் வெதிர்வென்னும் முக்காலமும்
திறம்பட உரைப்பது குறத்திப் பாட்டே (பன்-217)
குறத்திப்பாட்டு என்ற தலைப்பில் எந்த நூலும் கிடைக்கவில்லை.[1] குறம், குறவஞ்சி ஆகிய தலைப்பில் உள்ள நூல்களே கிடைத்துள்ளன.