குர்விந்தர் சிங் கில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குர்விந்தர் சிங் கில்
Gurvinder Singh Gill
நிலைமுன்களம்
உயரம்6 ft 7 in (2.01 m)
எடை220 lb (100 kg)
சங்கம்ஐக்கிய கூடைப்பந்து கூட்டணி சார்பு கூடைப்பந்து போட்டிகள்
அணிபஞ்சாப் சிடீலர்சு
பிறப்புசனவரி 21, 1996 (1996-01-21) (அகவை 28)
மோகா
தேசிய இனம் இந்தியர்
வல்லுனராக தொழில்2015–இன்று வரை

குர்விந்தர் சிங் கில் (Gurvinder Singh Gill) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழில்முறை கூடைப் பந்தாட்ட வீரராவார்.[1] கேரி கில் என்ற பெயராலும் இவர் அழைக்கப்படுகிறார். 1996 ஆம் ஆண்டு சனவரி மாதம் 21 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.

குர்விந்தர் சிங் கில் தற்போது இந்தியாவின் ஐக்கிய கூடைப்பந்து கூட்டணி சார்பு கூடைப்பந்து போட்டிகளில் பஞ்சாப் சிடீலர்சு அணிக்காக விளையாடுகிறார்.[2] 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பன்னாட்டு கூடைப்பந்து சங்கத்தின் சார்பாக சீனாவில் நடைபெற்ற ஆசிய வெற்றியாளர் போட்டியில் இந்தியாவின் தேசிய கூடைப்பந்து அணியில் இவரும் ஓர் உறுப்பினராக இருந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ShieldSquare Captcha". validate.perfdrive.com. பார்க்கப்பட்ட நாள் 2020-12-08.
  2. "Gurvinder Singh Gill Basketball Player Profile, Punjab Steelers". Basketball.asia-basket.com. பார்க்கப்பட்ட நாள் 30 September 2017.
  3. "Gurvinder Singh Gill profile, FIBA Asia Championship 2015". Archive.fiba.com. பார்க்கப்பட்ட நாள் 30 September 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்விந்தர்_சிங்_கில்&oldid=3897804" இலிருந்து மீள்விக்கப்பட்டது