குர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குர்மா என்பது காய்கள் அல்லது கறி, தயிர், தண்ணீர் மற்றும் மசாலா சேர்த்து வைக்கப்படும் ஒருவகை குழம்பு ஆகும்.

சொற்பிறப்பியல்[தொகு]

குர்மா என்பது துருக்கிய வேர் கொண்ட 'கொர்மா' என்ற உருது சொல்லிலிருந்த பிறந்தது. இது சமைக்கும் வகையைக் குறிக்கும் சொல்லாகும். இந்த துருக்கிய வேர்ச் சொல்லிற்க பொறித்தெடுக்கப்பட்ட என்று பொருள். இந்தியாவில் இத்துருக்கிய சொல் வழங்கப்பட்டாலும், இது சமைக்கப்படும் முறை முற்றிலும் வேறுபட்டதாகும்.

வரலாறு[தொகு]

இந்தியாவில் குர்மா முகலாய உணவு வகைகளில் ஒன்று. தாஜ்மஹால் திறக்கப்பட்ட பொழுது, வெள்ளிப் படலமிட்ட வெள்ளைக் குர்மா சாஜஹான் மற்றும் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டது.

பொதுவாக, குர்மா என்பது காய்கள் அல்லது கறி, தயிர், தண்ணீர் மற்றும் மசாலா சேர்த்து வைக்கப்படும் ஒருவகை குழம்பு ஆகும். இதில் பலவகை உண்டு. இதில் சீரகம், தனியா போன்ற நறுமணப் பொருட்களுடன் தயிர் மற்றும் கறிகள் சேர்த்து சமைக்கப்படும் உணவாகும். பாரம்பரியமாக, இது பானையின் மேலும் கீழும் ஆகிய இரு பக்கங்களிலும சூடு செய்யப்பட்டு சுற்றிலும் சூடேற்றி தயாரிக்கப்படுகிறது. இது செம்மறி ஆடு, வெள்ளாடு, மாட்டுக்கறி சேர்த்தும் சமைக்கப்படுகிறது. சிவப்பு முள்ளங்கி மற்றும் கீரைகள் சேர்த்தும் சமைக்கப்படுகிறது. சில நேரங்களில் 'சாஹி' என்ற சொல் அதன் அரச கெளரவத்தைக் குறிக்கும் ஒருவகை குர்மாவிற்குப் பயன்படுத்தப்படுகிறது.

வேறுபாடுகள்[தொகு]

யுனைட்டட் கிங்டத்தில்[தொகு]

யுனைட்டட் கிங்டத்தில் மிதமான மசாலாவுடன் கெட்டியான குழம்பாக இது பாிமாறப்படுகிறது. இதில் முந்திாி, பாதாம், தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. 21 ஆம் நுாற்றாண்டில் இது அங்குள்ள மக்களின் பிரபலமான உணவு முறையாகிவிட்டது.

நவரத்தின குர்மா[தொகு]

ஒன்பது வகையான காய்கறிகளுடன் பன்னீர் மற்றும் கொட்டை பருப்புகள் சேர்த்து செய்யப்படும் குர்மா ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்மா&oldid=3458241" இருந்து மீள்விக்கப்பட்டது