குரோசே
Appearance
குரோசே (crochet) என்பது முனை வளைந்த கொக்கி போன்ற ஒற்றை ஊசி (hook) பயன்படுத்தி, நூலைக் கொண்டு ஆடைபின்னும் ஒரு தொழில்நுட்பம்.
இதனைக் கொண்டு ஆடைகள், ஸ்வெட்டர்கள், சால்வைகள், விளையாட்டுப் பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் போன்றவை செய்யலாம். இந்த ஊசிகள் பலவிதமான அளவுகளில் கிடைக்கின்றன. செய்யும் பொருளின் தன்மைக்கேற்ப வெவ்வேறு தடிமனான ஊசிகள் பயன்படுத்தப்படும்.