குருகு (கொடி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குருகு என்னும் சொல்லால் குறிப்பிடப்படும் பொருள்களில் ஒன்று குருகுக்கொடி. குருகு என்பது காஞ்சி மரத்தில் ஏறிப் படரும் ஒரிவகைகு கொடி. அதன் பூக்கள் பால் நுரை போல மரத்தடியில் கொட்டிக் கிடக்கும். [1]
(உண்கலமாகப் பயன்பட்ட) குருகின் இலை குருகு இலை உதிர்வது கண்டு மக்கள் வருந்தினர். [2]
ஈந்து மரத்தில் படர்ந்திருக்கும் குருகு(க்கொடி) கோடையின் வெப்பத்தைத் தாங்க முடியாமல் உருகி வாடும். [3]

அடிக்குறிப்பு[தொகு]

 1. குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப்
  பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூக்
  காரகற் கூவியர் பாகொடு பிடித்த
  விழைசூழ் வட்டம் பால்கலந் தவைபோ
  னிழல்தாழ் வார்மண னீர்முகத் துறைப்ப - பெரும்பாணாற்றுப்படை 376
 2. குருகு இலை உதிரும், பரிபாடல் 15-41
 3. காய்ந்து செலற் கனலி கல் பகத் தெறுதலின்,
  ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை (அகநானூறு 55)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருகு_(கொடி)&oldid=3344088" இருந்து மீள்விக்கப்பட்டது