குயெர்பெட் வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குயெர்பெட் வினை (Guerbet reaction) என்பது ஒரு முதனிலை அலிபாட்டிக் ஆல்ககாலை β-ஆல்க்கைலேற்ற இருபடி ஆல்ககாலாக மாற்றும் கரிம வேதியியல் வினையாகும். ஒரு சமான எடை நீர் இவ்வினையில் இழக்கப்படுகிறது. மார்செல் குயெர்பெட் (1861-1938) என்பவர் இவ்வினையைக் கண்டறிந்து விவரித்த காரணத்தால் இவ்வினைக்கு குயெர்பெட் வினை என்ற பெயர் சூட்டப்பட்டது. மேலும் இவ்வினை நிகழ்வதற்கு உயர் வெப்பநிலைகளும் வினையூக்கிகளும் அவசியத் தேவைகளாகும் [1] This reaction requires a catalyst and elevated temperatures.

குயெர்பெட் வினை
குயெர்பெட் வினை

.

1899 ஆம் ஆண்டு அசல் வெளியீட்டில் என்-பியூட்டனால் சேர்மமானது 2-எத்தில்யெக்சனால் சேர்மமாக மாற்றப்படுவதாக கூறப்ப்பட்டது. இவ்வினையின் மூலமாகத் தயாரிக்கப்படும் ஆல்ககால்கள் குயெர்பெட் ஆல்ககால்கள் என்றழைக்கப்பட்டன. நீண்ட சங்கிலி அலிப்பாட்டிக் ஆல்ககால்களைப் பயன்படுத்தினால் வெளுப்பிகள் கிடைக்கின்றன.

கார உலோக ஐதராக்சைடுகள் அல்லது ஆல்காக்சைடுகள், இரானே நிக்கல் போன்ற ஐதரசனேற்ற வினையூக்கிகள், உயர் வெப்பநிலை (220 பாகை செல்சியசு) மற்றும் அழுத்தம் போன்றவை இவ்வினைக்குத் தேவைப்படுகின்றன.

வினை வழிமுறை[தொகு]

நான்கு படிநிலை வரிசைகளில் குயெர்பெட் வினை நிகழ்கிறது. முதல் படிவரிசையில் ஆல்ககால் ஆக்சிசனேற்றம் செய்யப்பட்டு ஆல்டிகைடாகிறது. பின்னர் இந்த இடைநிலைகள் ஓர் ஆல்டால் குறுக்க வினைக்கு உட்பட்டு அல்லைல் ஆல்டிகைடாக ஒடுக்கமடைகிறது. இதையே ஐதரசனேற்ற வினையூக்கிகள் ஆல்ககாலாக ஒடுக்குகிறது [2]

குயெர்பெட் வினையின் வினை வழிமுறை
குயெர்பெட் வினையின் வினை வழிமுறை

.

இரண்டு ஆல்டிகைடு மூலக்கூறுகள் விகிதச்சமமாதலின்றி வினைபுரிந்து தொடர்புடைய ஆல்ககாலும் கார்பாக்சிலிக் அமிலமும் உருவாகும் போது கன்னிசாரோ வினை நிகழவும் வாய்ப்பு இருக்கிறது. டிசுசெங்கோ வினையும் மற்றொரு பக்க வினையாக நிகழவும் வாய்ப்பு இருக்கிறது.

எல்லைகள்[தொகு]

வினைக்குத் தேவைப்படும் வெப்பநிலையை குறைக்க புதிய வினையூக்கியைப் பயன்படுத்தும் திட்டம் ஆராயப்படுகிறது. ஓர் ஆய்வில் 1-பென்டனால் இரிடியம் ஐதரசன்நீக்க வினையூக்கி பயன்படுத்தப்பட்டது. பொட்டாசியம் டெர்ட்-பியூட்டாக்சைடு ஒரு காரமாக பாரா-சைலீனில் பயன்படுத்தப்பட்டது. வாய்ப்பாட்டில் குறிக்கப்பட்டுள்ள Cp பென்டாமெத்தில்சைக்ளோபென்டாடையீன் ஈந்தணைவியைக் குறிக்கிறது ref>Toyomi Matsu-ura; Satoshi Sakaguchi; Yasushi Obora; Yasutaka Ishii (2006). "Guerbet Reaction of Primary Alcohols Leading to -Alkylated Dimer Alcohols Catalyzed by Iridium Complexes". Journal of Organic Chemistry 71 (21): 8306–8308. doi:10.1021/jo061400t. பப்மெட்:17025333. </ref>.

சிறிதளவு 1,7-ஆக்டாடையீன் புரோட்டான் ஏற்பியாக இங்கு தேவைப்படுகிறது.

குயெர்பெட் வினையின் எல்லை
குயெர்பெட் வினையின் எல்லை

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குயெர்பெட்_வினை&oldid=2749917" இலிருந்து மீள்விக்கப்பட்டது