குயினோலின் மஞ்சள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குயினோலின் மஞ்சள்
Quinoline Yellow
பெயர்கள்
வேறு பெயர்கள்
குயினோலின் மஞ்சள், ஆல்ககாலில் கரையும்; கரைப்பான் மஞ்சள் 33; சி.ஐ. கரைப்பான் மஞ்சள் 33; டி&சி மஞ்சள் #11; குயினோலின் மஞ்சள் ஏ; நுண்ணோக்கி குயினோலின் மஞ்சள் ; மஞ்சள் எண். 204; சி.ஐ. 47000
இனங்காட்டிகள்
8003-22-3 Y
ChEBI CHEBI:53700 Y
ChemSpider 6475 Y
EC number 83-08-9
InChI
  • InChI=1S/C18H11NO2/c20-17-12-6-2-3-7-13(12)18(21)16(17)15-10-9-11-5-1-4-8-14(11)19-15/h1-10,16H Y
    Key: IZMJMCDDWKSTTK-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • O=C(c3ccccc3C4=O)/C4=C2Nc1ccccc1C=C\2
பண்புகள்
C18H11NO2
வாய்ப்பாட்டு எடை 273.29 கி/மோல்
தோற்றம் மஞ்சள் தூள்
அடர்த்தி 1.34 கி/செ,மீ3
உருகுநிலை 240 °C (464 °F; 513 K)
கரையாது
தீங்குகள்
R-சொற்றொடர்கள் R20/21 R33
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

குயினோலின் மஞ்சள் (Quinoline Yellow SS ) C18H11NO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் பசுமை கலந்த பிரகாசமான மஞ்சள் நிறச் சாயமாகும். ஆல்ககாலில் கரையும் என்பதை அடையாளப்படுத்த குயினோலின் மஞ்சள் என்ற பெயருடன் Spirit soluble என்ற பொருளில் SS என்று சேர்த்து பயன்படுத்துவர். இது நீரில் கரையாது ஆனால் முனைவற்ற கரைப்பான்களில் கரையும். பல்வளைய சேர்மமான குயினோப்தாலோன் நிறமிகளில் குயினோலின் மஞ்சள் பெரும்பங்கு வகிக்கிறது.[1] குயினோலின் மஞ்சள் கிளர்வுநிலை உள்மூலக்கூற்று புரோட்டான் பரிமாற்ற நடத்தையை வெளிப்படுத்துகிறது. இந்நடத்தை இதன் ஒழுக்கமான ஒளிநிலைப்புத்தன்மைக்கு காரணமாக இருக்கலாம் என்று சமீபத்திய நிறமாலையியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[2]

தயாரிப்பு மற்றும் வேதிவினை[தொகு]

முதன்முதலில் 1878 ஆம் ஆண்டில் குயினோலின் மஞ்சுள் SS தயாரிக்கப்பட்டது. தாலிக்கு நீரிலி மற்றும் குயினாலிடின் ஆகியவற்றை வினைபுரியச் செய்து அப்போது குயினோலின் மஞ்சள் SS தயாரிக்கப்படுகிறது. இந்த கலவை இரண்டு சமநிலை மாற்றியங்களின் கலவையாக இருக்கும்.[3] குயினோலிடின் பெறுதிச்சோ்மங்களை மற்ற அமில நீரிலியுடன் சோ்த்து பிற குயினோப்தாலோன் குடும்ப சாயங்களைத் தயாரிக்கமுடியும்.

இதை சல்போனேற்ற வினைக்கு உட்படுத்தினால் நீரில் கரையும் சாயமான குயினோலின் மஞ்சுள் WS சாயம் கிடைக்கிறது.

பயன்கள்[தொகு]

அரக்குப்பூச்சு. பாலிசிடைரின், பாலிகார்பனேட்டுகள், பாலி அமைடுகள், அக்ரைலிக் பிசின்கள் மற்றும் ஐதரோகாா்பன் கரைப்பான்களில் குயினோலின் மஞ்சுள் SS பயன்படுகிறது. மேலும் வெளிபூச்சு மருந்துகள், ஒப்பனைப் பொருக்களிலும் இது பயன்படுகிறது. மஞ்கள் நிற புகை உருவாக்கத்திலும் இது பயன்படுகிறது.

பாதுகாப்பு[தொகு]

குயினோலின் மஞ்சுள் SS சிலருக்கு தோல் ஒவ்வாமையை ஏற்படுத்தும். 240 °செல்சியசு வெப்பநிலையை (464 °F) உருகுநிலையாகக் கொண்ட மஞ்சள் நிற தூளாக குயினோலின் மஞ்சுள் SS காணப்படுகிறது.

சான்றுகள்[தொகு]

  1. Volker Radtke "Quinophthalone Pigments" in High Performance Pigments (2nd Edition), Edited by Edwin B. Faulkner, Russell J. Schwartz, 2009 Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/9783527626915.ch19
  2. Gi Rim Han et al., "Shedding new light on an old molecule: quinophthalone displays uncommon N-to-O excited state intramolecular proton transfer (ESIPT) between photobases", Scientific Reports, 2017, 7, 3863.
  3. Horst Berneth (2005), "Methine Dyes and Pigments", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a16_487.pub2
"https://ta.wikipedia.org/w/index.php?title=குயினோலின்_மஞ்சள்&oldid=3864335" இலிருந்து மீள்விக்கப்பட்டது