உள்ளடக்கத்துக்குச் செல்

குந்தலதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குந்தலதேசம் தசார்ணதேசத்திற்கு வடக்கிலும், சூரசேனதேசத்திற்கு தென்மேற்கிலும், ஆபீரதேசத்திற்கு வடகிழக்கிலும் பரவி இருந்த தேசம்.[1]

இருப்பிடம்

[தொகு]

இந்த குந்தலதேசமானது குரு, சூரசேநம் முதலிய தேசங்களைக் காட்டிலும் கிழக்கு மேற்கில் நீண்டு நீலமுள்ளதாய் இருக்கும். இந்த தேசத்தின் தெற்கு முகமாய் ஓடும் யமுனா நதியின் வெள்ளப் பெருக்கால் பூமிகள் மட்டும் கொஞ்சம் தாழ்ந்து செழித்து இருக்கும்.[2]

பருவ நிலை

[தொகு]

இந்த தேசத்தில் குளிர், பனி அதிகமாக இருக்காது, மழை மாத்திரம் சித்திரை, வைகாசி மாதம் முதல் புரட்டாசி மாதம் முடிய விடாமல் பெய்துகொண்டே இருக்கும்.

மலை, காடு, மிருகங்கள்

[தொகு]

இந்த தேசத்தின் நடுவில் ஓடும் யமுனையின் கிழக்குப் பக்கத்தில் கௌரீகிரி என்ற பெரிய மலை உண்டு, மலையின் அடிவாரத்திலிருந்து பரந்து விரிந்த காடுகளும், அவைகளில் யானை, கரடி, புலி முதலிய மிருகங்கள் அதிகமாக இருக்கும். யமுனையின் கிழக்கில் இந்த கௌரீகிரியைச்- சுற்றிலும் உள்ள தேசம் உலூதம் என்பதாகும். இந்த உலூதம் குந்தலதேசத்தின் உபதேசமாகும்.

நதிகள்

[தொகு]

இந்த தேசத்தின் கிழக்கு பக்கத்தில் இருக்கும் கௌரீகிரி மலைகளிலிருந்தும், பார்கவீ எனகற நதி உண்டாகி குந்தலதேசத்தின் மேற்கு முகமாய் ஓடி, தெற்கு முகமாய் திரும்பி ஜீவ நதியான யமுனையுடன் இணைந்துவிடுகிறது.

விளைபொருள்

[தொகு]

இந்த தேசத்தில் நெல், கோதுமை, கரும்பு முதலியனவும், தாம்பரம், பித்தளை முதலிய உலோகப் பொருள்களாலான வெகு அழகாய், நேர்த்தியாய் செய்யப்பட்ட பாத்திரங்களை அம்மக்கள் பயன்படுத்தினர்.

கருவி நூல்

[தொகு]

சான்றடைவு

[தொகு]
  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 73-
"https://ta.wikipedia.org/w/index.php?title=குந்தலதேசம்&oldid=2076821" இலிருந்து மீள்விக்கப்பட்டது