குதிரை மறம்
Appearance
குதிரைமறம் என்னும் துறைக்குறிப்பு தரப்பட்டுள்ள புறநானூற்றுப் பாடல்கள் ஐந்து உள்ளன.
இலக்கணம்
[தொகு]- குதிரைமறம் என்னும் துறையைத் தொல்காப்பியம் தும்பைத் திணையில் வரும் 12 துறைகளில் ஒன்றாகக் காட்டுகிறது. [1]
- புறப்பொருள் வெண்பாமாலை இதனைத் தும்பைத் திணையில் குறிப்பிடும் 24 துறைகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது. [2]
இலக்கியம்
[தொகு]- போருக்குச் சென்ற எல்லாக் குதிரைகளும் வந்துவிட்டன. நான் என் மகனுக்குக் கொடுத்த குதிரை மட்டும் இன்னும் வரவில்லை. உல்கு வரி வாங்கும் சந்தியில் தடுத்து நிறுத்தும் மரம் போல அவன் குதிரை போராடிக்கொண்டிருக்கும் என எண்ணுகிறான், தந்தை. [3]
- சிற்றூர் மன்னன் குதிரையைக் கண்ட பகைவன் குதிரைகள் முருகன் கோயில் பக்கம் வந்தவுடன் கலன் தொடா மகளிர் (வீட்டு விலக்கு உள்ள மகளிர், தீட்டு மகளிர்) விலகி நிற்பது போல ஒதுங்கி நிற்கின்றன. [4]
- மூங்கில் வெயிலில் வெடிப்பது போல ஓடிய குதிரைமேல் இருந்த வீரன் எறிந்த வேலால் வீழ்ந்த யானை வானத்து மீன் போலப் பலவாம். [5]
- ஒரு தந்தை சொல்கிறான். நேற்று நான் யானையை வீழ்த்திய வேலைப் பெருமித்துடன் ஆட்டிக் காட்டிக்கொண்டே வந்தேன். இன்று என் மகன் பகைவர் வீசிய வேலைத் தன் மார்பில் தாங்கி ஆட்டிக் காட்டிக்கொண்டே குதிரைமேல் வருகிறான். [6]
- ஒரு பெண் தன் கணவனிடம் சொல்கிறாள். நீ இரண்டாம் நாள் போருக்குக் குதிரையை இங்கே பூட்டுகிறாய். அங்கே என் அண்ணன் உன்னிடம் தப்பிச் சென்றவனை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டுக் குதிரைமேல் சென்றுவிட்டான். அவன் சொன்ன சொல் இரண்டுபடுவது இல்லை. (தப்புவது இல்லை). [7]
காண்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ தொல்காஈப்பியம் புறத்திணையியல் 69
- ↑
எறிபடையான் இகல் அமருள்
செறிபடை மான் திறம் கிளந்தன்று – புறப்பொருள் வெண்பாமாலை, தும்பைப் படலம் 133 - ↑ இருபேர் யாற்ற ஒருபெருங் கூடல் விலங்கிடு பெருமரம் போல உலைந்தன்றுகொல் அவன் மலைந்த மாவே - புறநானூறு 273
- ↑ புறநானூறு 299
- ↑ புறநானூறு 302
- ↑ புறநானூறு 303
- ↑ புறநானூறு 304