உள்ளடக்கத்துக்குச் செல்

குஞ்சு விளையாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குஞ்சு விளையாட்டு, நாட்டுப்புறங்களில் சிறுவர் சிறுமியர் ஆடும் விளையாட்டுகளில் ஒன்று. இது ஓடித்தொடும் விளையாட்டு. ஒரு அணி கோழிக்குஞ்சு. மற்றொரு அணி பருந்து. பருந்து கோழிக்குஞ்சைப் பிடிக்கவேண்டும்.

ஒரு வட்டம் வரையப்பட்டிருக்கும். அது குஞ்சு பதுங்குமிடம். அதிலிருந்து 10 அடி தொலைவில் ஒரு உத்திக்கோடு இருக்கும். அதில் குஞ்சு அணி நிற்கும். அதிலிருந்து 10 அடி தொலைவில் மற்றொரு உத்திக்கோடு. அதில் பருந்து அணி நிற்கும். பொத்தியாளாக இருக்கும் நடுவர் 'உய்' என ஓர் ஒலி எழுப்புவார். பருந்து குஞ்சுகளைப் பிடிக்கும். குஞ்சு ஓடி வட்டத்துக்குள் நின்றுகொள்ளும். இங்கு வந்துவிட்டால் தொட்டால் சேர்த்தி இல்லை. கடைசி ஒருவர் பிடிபடும் வரையில் ஆட்டம். பின் குழு மாறி விளையாடுவர். எத்தனை 'உய்'யில் அணியிலுள்ள அனைவரும் பிடிபடுகிறார்கள் என்பது கணக்கு. அதிக எண்ணிக்கைக் கணக்கில் பிடிபட்டவர் வெற்றி.

மேலும் பார்க்க

[தொகு]

கருவிநூல்

[தொகு]
  • ஞா. தேவநேயப் பாவாணர். தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு. 1954
"https://ta.wikipedia.org/w/index.php?title=குஞ்சு_விளையாட்டு&oldid=1881001" இலிருந்து மீள்விக்கப்பட்டது